ஓப்போ ஏ 92 திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஓப்போ ஏ-சீரிஸின் சமீபத்திய மாடல் ஆகும். இந்த போன் தற்போது மலேசியாவில் கிடைக்கிறது. புதிய ஓப்போ ஏ 92 குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மற்றும் பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.
Oppo A92-வின் விலை MYR 1199 (இந்திய மதிப்பில் ரூ.21,000) ஆகும். ஓப்போ புதிய ஸ்மார்ட்போனை ட்விலைட் பிளாக் மற்றும் ஷைனிங் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ விற்பனை மே 9 முதல் தொடங்கும். போனுக்கான முன்கூட்டிய ஆர்டர்கள் ஏற்கனவே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த போனில் 6.5 இன்ச் ஃபுல்-எச்டி + ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஒரு ஸ்னாப்டிராகன் 665 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 10 உடன் கலர் 10 7.1-ல் இயங்குகிறது.
Oppo ஏ 92 பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. இந்த கேமராவில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் கேமராக்களுடன் வருகிறது. போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.
இதில் 18W வேகமான சார்ஜிங் உதவியுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இணைப்பிற்கு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. இந்த போனில் சீன நிறுவனம் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை வழங்கியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்