Oppo-வின் புதிய ஸ்மார்ட்போன்களான Oppo A91, Oppo A8 அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 22 டிசம்பர் 2019 10:42 IST
ஹைலைட்ஸ்
  • Oppo A91-ல் 119-degree FOV உடன் wide-angle கேமரா உள்ளது
  • இந்த போன் 6.4-inch full-HD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது
  • Oppo A8, பின்புறத்தில் 12-megapixel பிரதான கேமராவை பேக் செய்கிறது

Oppo A91 மற்றும் Oppo A8 ஆகியவை இப்போது சீனாவில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தயாராக உள்ளன

ஓப்போ அதன் இடைப்பட்ட A-சீரிஸ் போன்களின் இரண்டு புதிய சாதனங்களைச் சேர்த்ததுள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் Oppo A8 மற்றும் Oppo A91 போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.


Oppo A91, Oppo A81-ன் விலை:

Oppo A91-ன் ஒரே 8GB+128GB வேரியண்ட் CNY 1,999 (சுமார் ரூ. 20,000)-யாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், gradient finish உடன் Red, Blue, மற்றும் Black வண்ண விருப்பங்களில் வருகிறது. இது இப்போது அதிகாரப்பூர்வ Oppo eshop-ல் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தயாராக உள்ளது. இந்த போன் டிசம்பர் 26 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும்.

Oppo A8-ஐப் பொறுத்தவரை, போனின் ஒற்றை 4GB+128GB வேரியண்ட் CNY 1,199 (சுமார் ரூ. 12,000) விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இப்போது Oppo online store-ல் இருந்து முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம். இது சீனாவில் டிசம்பர் 26 முதல் Azure மற்றும் Black வண்ண விருப்பங்களில் கிடைக்கும். ஆனால், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் கிடைப்பது குறித்து எந்த வார்த்தையும் இல்லை.


Oppo A91-ன் விவரக்குறிப்புகள்:

Oppo A91, 90.7 percent screen-to-body ratio, a waterdrop notch மற்றும் Corning Gorilla Glass protection உடன் 6.4-inch full-HD+ (1080 x 2400 pixels) AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 8GB RAM மற்றும் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு octa-core processor-ஆல் இயக்கப்படுகிறது. புதிய ஓப்போ in-display fingerprint சென்சார் கொண்டுள்ளது. இது போனை வெறும் 0.32 வினாடிகளில் திறக்கும் என்று கூறப்படுகிறது.

Oppo A91 அங்கிகாரத்திற்காக in-display fingerprint சென்சாரைக் கொண்டுள்ளது

Oppo A91-ன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 119-degree field of view, dedicated macro camera மற்றும் depth சென்ச்சாருடன் 48-megapixel பிரதான கேமரா, 8-megapixel ultra-wide angle shooter ஆகியவை அடங்கும். இது VOOC 3.0 ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 4,000mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது, போனை 30 நிமிடங்களில் 0-60 சதவீதத்தை சார்ஜ் செய்வதாகக் கூறப்படுகிறது.

Advertisement


Oppo A8-ன் விவரக்குறிப்புகள்:

Oppo A8, 89 percent screen-to-body ratio மற்றும் மேலே waterdrop notch உடன் 6.5-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 4GB RAM மற்றும் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு octa-core processor-ல் இருந்துப் சக்தியை ஈர்க்கிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256GB வரை விரிவாக்கக்கூடியது.

Oppo A8, பின்புறத்தில் 2-megapixel wide-angle கேமராவைக் கொண்டுள்ளது

Advertisement

Oppo A8-ன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில், 2-megapixel wide-angle shooter மற்றும் 2-megapixel depth சென்சார் உதவியுடன் 12-megapixel பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. இது 4,230mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டு வெளிவருகிறது. இது வீடியோக்களைப் பார்க்கும்போது 14 மணிநேரம் நீடிக்கும் என்றும் 7 மணிநேர ஆன்லைன் கேமிங்கைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த போன் ColorOS 6.1 உடன் Android Pie-ல் இயங்குகிறது. மேலும், சிறந்த ஆடியோ வெளியீட்டிற்கு Dirac sound effect-ஐ வழங்குகிறது.

 
KEY SPECS
Display 6.50-inch
Processor octa-core
Rear Camera 12-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4230mAh
OS Android 9
Resolution 720x1600 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.