ஓப்போ அதன் இடைப்பட்ட A-சீரிஸ் போன்களின் இரண்டு புதிய சாதனங்களைச் சேர்த்ததுள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் Oppo A8 மற்றும் Oppo A91 போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
Oppo A91-ன் ஒரே 8GB+128GB வேரியண்ட் CNY 1,999 (சுமார் ரூ. 20,000)-யாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், gradient finish உடன் Red, Blue, மற்றும் Black வண்ண விருப்பங்களில் வருகிறது. இது இப்போது அதிகாரப்பூர்வ Oppo eshop-ல் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தயாராக உள்ளது. இந்த போன் டிசம்பர் 26 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும்.
Oppo A8-ஐப் பொறுத்தவரை, போனின் ஒற்றை 4GB+128GB வேரியண்ட் CNY 1,199 (சுமார் ரூ. 12,000) விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இப்போது Oppo online store-ல் இருந்து முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம். இது சீனாவில் டிசம்பர் 26 முதல் Azure மற்றும் Black வண்ண விருப்பங்களில் கிடைக்கும். ஆனால், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் கிடைப்பது குறித்து எந்த வார்த்தையும் இல்லை.
Oppo A91, 90.7 percent screen-to-body ratio, a waterdrop notch மற்றும் Corning Gorilla Glass protection உடன் 6.4-inch full-HD+ (1080 x 2400 pixels) AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 8GB RAM மற்றும் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு octa-core processor-ஆல் இயக்கப்படுகிறது. புதிய ஓப்போ in-display fingerprint சென்சார் கொண்டுள்ளது. இது போனை வெறும் 0.32 வினாடிகளில் திறக்கும் என்று கூறப்படுகிறது.
Oppo A91-ன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 119-degree field of view, dedicated macro camera மற்றும் depth சென்ச்சாருடன் 48-megapixel பிரதான கேமரா, 8-megapixel ultra-wide angle shooter ஆகியவை அடங்கும். இது VOOC 3.0 ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 4,000mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது, போனை 30 நிமிடங்களில் 0-60 சதவீதத்தை சார்ஜ் செய்வதாகக் கூறப்படுகிறது.
Oppo A8, 89 percent screen-to-body ratio மற்றும் மேலே waterdrop notch உடன் 6.5-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 4GB RAM மற்றும் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு octa-core processor-ல் இருந்துப் சக்தியை ஈர்க்கிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256GB வரை விரிவாக்கக்கூடியது.
Oppo A8-ன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில், 2-megapixel wide-angle shooter மற்றும் 2-megapixel depth சென்சார் உதவியுடன் 12-megapixel பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. இது 4,230mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டு வெளிவருகிறது. இது வீடியோக்களைப் பார்க்கும்போது 14 மணிநேரம் நீடிக்கும் என்றும் 7 மணிநேர ஆன்லைன் கேமிங்கைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த போன் ColorOS 6.1 உடன் Android Pie-ல் இயங்குகிறது. மேலும், சிறந்த ஆடியோ வெளியீட்டிற்கு Dirac sound effect-ஐ வழங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்