Photo Credit: China Telecom
ஓப்போ ஏ 52 என்ற புதிய ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகப்படுத்த ஓப்போ தயாராகி வருகிறது. இந்த போன் சீனா டெலிகாமின் தயாரிப்பு நூலகத்தில் தோன்றியுள்ளது. மேலும், இந்த பட்டியல் வரவிருக்கும் ஓப்போ ஏ 52 பற்றிய அனைத்து விவரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த போன் சீன சந்தையில் மே 1-ஆம் தேதி அறிமுகமாகும் என்றும் பட்டியல் தெரிவித்துள்ளது.
Oppo A52-வின் விலை, 1,799 சிஎன்ஒய் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.19,500) என்று பட்டியல் தெரிவிக்கிறது.
இந்த போன், Black, Star White மற்றும் Condensation Purple ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த போன், 6.5 இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, இது முன் ஹோல்-பஞ்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே முழு HD + தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது. இந்த போன் ஸ்னாப்டிராகன் 665 வி சோசி மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த போன் PDAM10 மாடல் எண்ணைக் கொண்டுள்ளது. இது ஒரு பாலிகார்பனேட் உடலைக் கொண்டுள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்க முனைகிறது.
Oppo ஏ 52-வின் பின்புற குவாட் கேமரா அமைப்பில் 12 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை உள்ளது. செல்ஃபிக்களுக்கு, முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் ஷூட்டர் உள்ளது. இந்த போன், பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது, 162 x 75.5 x 8.9 மிமீ அளவு மற்றும் 192 கிராம் எடையைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்