ஓப்போ நிறுவனம் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் அறிமுகமான ஓப்போ ஏ3எஸ் ஸ்மாட்ர்போன் ரூ.10,990 ஆக நிர்ணயம் செய்துள்ளது ஓப்போ.
இந்த புதிய போன் 2 ஜிபி ரேம் மெமரி மற்றும் 16 ஜிபி நினைவுத்திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் 10 போன்ற திரை வடிவமைப்பையும், 4230 mAH திறன் கொண்ட பேட்டரியையும் பெற்றுள்ளது.
இதில் ஸ்னாப்ட்ராகன் 450 எஸ்ஓசி பிராஸரும், செஃல்பி கேமராவில் ஓப்போவின் AI பியூட்டி டெக்னாலஜியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனில் 13 மெகாபிக்ஸல் மற்றும் 2 மெகாபிக்ஸல் கொண்ட இரண்டு பின்புற கேமராக்கள் உள்ளன. இதனால் இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.2 இன்ச் அளவிலான திரையை இந்த போன் கொண்டுள்ளது. அது போல இதில் இசை கேட்பதற்காக சிறப்பான ஸ்பீக்கர்கள் இடம் பெற்றுள்ளன. எனவே இந்த போன் அதிக அளவில் இளைஞர்களைக் கவரும் என்று அந்நிறுவனத்தின் பிராண்ட் இயக்குநர் வில் யாங் தெரிவித்துள்ளார்.
வருகிற ஜூலை 15ம் தேதியில் இருந்து ப்ளிப்கார்ட், பேடிஎம், அமேசான் உள்ளிட்ட தளங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்