5,000mAh பேட்டரியுடன் வருகிறது Oppo A11!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 15 அக்டோபர் 2019 17:24 IST
ஹைலைட்ஸ்
  • Oppo A11-ன் விலை சீனாவில் CNY 1,499 ஆகும்
  • இந்த போன் அக்டோபர் 17 முதல் விற்பனைக்கு வரும்
  • 4GB RAM உடன் Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது Oppo A11

முன்பக்கத்தில் 8-megapixel கேமராவுடன் வருகிறது Oppo A11

Oppo A11 சில வாரங்களுக்கு முன்பு சீனா டெலிகாமில் காணப்பட்ட பின்னர் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பைப் பார்க்கும்போது, ​​இந்த தொலைபேசி கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A5 2020-யின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகத் தெரிகிறது. 

விலை:

Oppo A11 சீனாவில், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு CNY 1,499 (சுமார் ரூ.15,100) ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 17 முதல் விற்பனைக்கு வரும். மேலும் Stream Purple, Cloud White மற்றும் Lake Green நிறங்களில் கிடைக்கும். நினைவுகூர, Oppo A11 X கடந்த மாதம் சீனாவில் CNY 1,799 (சுமார் ரூ. 18,000)-யாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், Marine Green மற்றும் Space Purple நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:

விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பிற்கு வரும்போது, Oppo A11, ColorOS 6.0.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. இது 6.5-inch HD+டிஸ்பிளேவுடன் waterdrop-style notch-ஐக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் octa-core Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. இது Oppo A5 2020-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். உண்மையான chipset தகவல்கள் இன்னும் தளத்தில் பட்டியலிடப்படவில்லை. 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது Oppo A11.

குறிப்பிட்டுள்ளபடி, A11 X-ல் 48 மெகாபிக்சல் பிரதான சென்சாருக்கு பதிலாக, A1 ஆதரவுடன் 12 மெகாபிக்சல் ஷூட்டரும், A11 போர்டில் குவாட் கேமரா அமைப்பும் உள்ளது. 119 டிகிரி பார்வைக்கு wide-angle lens உள்ளது. பின்புற கேமரா அம்சங்களில் 1080p video recording, Night View 2.0, EIS மற்றும் பல உள்ளன. உண்மையான சென்சார் விவரங்கள் பட்டியலில் இன்னும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், A5 2020-ல் இரண்டாம் நிலை 8-megapixel ultra-wide-angle camera, 2-megapixel monochrome shooter மற்றும் portraits-க்கு 2-megapixel depth sensor ஆகியவை இருக்கும்.

கூடுதலாக, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஆன்போர்ட் ஸ்டோரேஜைப் பெறுவீர்கள். Oppo A11-ல் Dolby Atmos ஆதரவு, 3D finish, Game Boost 2.0 மற்றும் rear fingerprint sensor ஆகிய மற்ற அம்சங்களும் அடங்கும்.

 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 665
Front Camera Unspecified
Rear Camera 12-megapixel
RAM 3GB
Storage 64GB
Battery Capacity 5000mAh
OS Android 9 Pie
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo A11, Oppo A11 PRice, Oppo A11 Specifications, Oppo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பைண்ட் ஹப் மூலம் தொலைந்த ஆண்ட்ராய்டு போனை எப்படிக் கண்டுபிடிப்பது மற்றும் அழிப்பது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  2. வீடியோவில் நிரூபிக்கப்பட்ட ஆப்பிள் பாதுகாப்பு குறைபாடு: லாக் செய்த ஐபோனிலிருந்து $10,000 திருடிய யூடியூபர்
  3. ஒப்போ பைண்ட் X10: 8,000mAh பேட்டரி மற்றும் 200-மெகாபிக்சல் கேமராக்களைக் கொண்டிருக்கலாம் எனத் தகவல்
  4. ஒன்பிளஸ் பேட் 4 இந்திய அறிமுகத் தேதி அறிவிப்பு; முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு வெளியீடு
  5. ரூ. 40,000-க்கு உட்பட்ட சிறந்த மொபைல்கள்: நத்திங் போன் 4a ப்ரோ, ஒன்பிளஸ் நோர்ட் 6 மற்றும் பல
  6. ஒப்போ F33 ப்ரோ 5G vs ஒன்பிளஸ் நார்ட் 6 vsநத்திங் போன் 4a ப்ரோ:இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  7. ஒப்போ F33 ப்ரோ 5G (Oppo F33 Pro 5G): முதல் பார்வையில்
  8. சோனி எக்ஸ்பீரியா 1 VIII: ஹெட்போன் ஜாக் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இருக்கலாம் என FCC தகவல்
  9. ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா முன்பதிவுத் தொடக்கம்; அதன் சேமிப்பு மற்றும் நிறங்கள் குறித்த விவரங்கள் வெளியானது
  10. இந்தியாவில் மோட்டோ பேட் 60 ப்ரோ மற்றும் மோட்டோ பேட் 60 நியோ மாடல்களின் விலை உயர்வு: டிப்ஸ்டர் தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.