quad camera அமைப்புடன் 12-megapixel முதன்மை சென்சார் இதில் இருக்கிறது
முன்பக்கத்தில் 8-megapixel கேமராவுடன் வருகிறது Oppo A11
Oppo A11 சில வாரங்களுக்கு முன்பு சீனா டெலிகாமில் காணப்பட்ட பின்னர் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பைப் பார்க்கும்போது, இந்த தொலைபேசி கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A5 2020-யின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகத் தெரிகிறது.
விலை:
Oppo A11 சீனாவில், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு CNY 1,499 (சுமார் ரூ.15,100) ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 17 முதல் விற்பனைக்கு வரும். மேலும் Stream Purple, Cloud White மற்றும் Lake Green நிறங்களில் கிடைக்கும். நினைவுகூர, Oppo A11 X கடந்த மாதம் சீனாவில் CNY 1,799 (சுமார் ரூ. 18,000)-யாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், Marine Green மற்றும் Space Purple நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பிற்கு வரும்போது, Oppo A11, ColorOS 6.0.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. இது 6.5-inch HD+டிஸ்பிளேவுடன் waterdrop-style notch-ஐக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் octa-core Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. இது Oppo A5 2020-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். உண்மையான chipset தகவல்கள் இன்னும் தளத்தில் பட்டியலிடப்படவில்லை. 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது Oppo A11.
குறிப்பிட்டுள்ளபடி, A11 X-ல் 48 மெகாபிக்சல் பிரதான சென்சாருக்கு பதிலாக, A1 ஆதரவுடன் 12 மெகாபிக்சல் ஷூட்டரும், A11 போர்டில் குவாட் கேமரா அமைப்பும் உள்ளது. 119 டிகிரி பார்வைக்கு wide-angle lens உள்ளது. பின்புற கேமரா அம்சங்களில் 1080p video recording, Night View 2.0, EIS மற்றும் பல உள்ளன. உண்மையான சென்சார் விவரங்கள் பட்டியலில் இன்னும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், A5 2020-ல் இரண்டாம் நிலை 8-megapixel ultra-wide-angle camera, 2-megapixel monochrome shooter மற்றும் portraits-க்கு 2-megapixel depth sensor ஆகியவை இருக்கும்.
கூடுதலாக, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஆன்போர்ட் ஸ்டோரேஜைப் பெறுவீர்கள். Oppo A11-ல் Dolby Atmos ஆதரவு, 3D finish, Game Boost 2.0 மற்றும் rear fingerprint sensor ஆகிய மற்ற அம்சங்களும் அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Redmi Note 15 Pro 5G India Launch Seems Imminent After Smartphone Appears on Geekbench
CERT-In Urges Android Users to Update Smartphones After Google Patches Critical Dolby Vulnerability
Apple Led Market as Global Smartphone Shipments Rose 2.3 Percent YoY in Q4 2025 Despite Growing Memory Shortage: IDC