ஒன்பிளஸ் தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகத்தை உறுதிப்படுத்தியது, அனைத்து வதந்திகளுக்கும், ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்த "புதிய, மிகவும் மலிவு விலையிலான ஸ்மார்ட்போன் தயாரிப்பு வரிசையில்" செயல்பட்டு வருவதாகவும், இது இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் ஒன்பிளஸ் சமூக தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவின் மூலம் புதிய தயாரிப்பை வெளிப்படுத்தினார். ஜூலை மாதம் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தும் என்று “OnePlusLiteZThing” என்ற பெயரைக் கொண்ட ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை நிறுவனம் உருவாக்கியுள்ளது. புதிய வரம்பில் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்து எந்த விவரங்களையும் லாவ் குறிப்பிடவில்லை. எனினும், வதந்திகளாக இருந்த தகவல், புதிதாக உருவாக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம், அது ஒன்பிளஸ் இசட் ஆக இருக்கும் என்று தெரிகிறது.
"நாங்கள் புதிதாக ஒன்றை முயற்சிக்கும்போது நாங்கள் எப்போதும் செய்வதைப் போல, ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் முதலில் அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த புதிய தயாரிப்பு வரிசையை ஒப்பீட்டளவில் சிறியதாகத் தொடங்கப் போகிறோம்" என்று தனது பதிவில் லாவ் கூறியுள்ளா. "ஆனால் கவலை கொள்ள வேண்டாம், எதிர்காலத்தில் மேலும் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை வட அமெரிக்காவிற்கும் கொண்டு வர நாங்கள் பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ஒன்பிளஸ் தற்போது அதன் மொபைல் மேம்பாட்டுத் துறையின் தலைவரான பால் யூ தலைமையிலான புதிய தயாரிப்புக் குழுவைக் கொண்டிருக்கும். இந்த புதிய குழுவில் உலகம் முழுவதிலுமிருந்து ஊழியர்கள் இருப்பார்கள் என்று அதன் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
ஜூலை வெளியீடு உறுதியானது
புதிய ஸ்மார்ட்போன் வரிசையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவதற்கு முன்பு சில ஹைப்பை உருவாக்க, ஒன்பிளஸ் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கியுள்ளது, அது தற்போது தனிப்பட்டதாக உள்ளது, ஆனால் அதிங் நான்கு பதிவுகள் உள்ளன. அந்த இன்ஸ்டாகிராம் கணக்கின் சமீபத்திய பதிவில் “ஜூலை” உரையை மொழிபெயர்க்கும் மோர்ஸ் குறியீட்டைக் காட்டுகிறது. இதன் மூலம் முதல் ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
ஒன்பிளஸ் இசட், அல்லது ஒன்பிளஸ் நோர்ட் என வதந்தி பரப்பப்படும் புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியாக ஜூலை 10ல் இருக்கும் என தெரிகிறது. எனினும், நிறுவனம் அதன் முடிவை உறுதிப்படுத்தும் வரை அதனை வதந்தியாக எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது.
புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய நடவடிக்கை?
ஒன்பிளஸ் சந்தைக்கு மலிவு விலையில் ஒன்றைக் கொண்டுவர முயற்சிப்பது என்பது முதல் முறை அல்ல. இது நவம்பர் 2015ல் நிறுவனத்தால் பட்ஜெட் மாதிரியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் எக்ஸ் உடன் முயற்சித்து தோல்வியடைந்தது.
நிறுவனத்தின் இணை நிறுவனர்களால் விளம்பரம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் இசட் ஒன்பிளஸ் நோர்ட் வெளியீடு
TUV ரைன்லேண்ட் தளத்தில் ஒன்பிளஸ் இசட் ஸ்பாட், இணை நிறுவனர் விளம்பரம் உள்ளது. எனினும்கூட, புதிய நடவடிக்கை சமீபத்தில் ஒன்பிளஸ் தொலைபேசிகளைத் தவிர்த்து வந்த வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு உதவியாக இருக்கும் - பிரீமியம் விலை காரணமாக. நிறுவனம் தனது பயணத்தை 2014ம் ஆண்டில் ஒரு "முதன்மை" தயாரிப்பாளராகத் தொடங்கியது.
Is OnePlus 8 Pro the perfect premium phone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்