OnePlus Nord ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள் முழு விவரங்கள் இதோ..

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 22 ஜூலை 2020 16:26 IST
ஹைலைட்ஸ்
  • ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் 4 கேமராக்கள் உள்ளன
  • 5ஜி நெட்வோர்க் உள்ளது
  • ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா அம்சங்கள் தான் இதிலும் உள்ளன

ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் மூன்று வித வேரியண்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பட்ஜெட் விலையில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்பதன் அடிப்படையில், வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள், விற்பனைக்கு வரும் தேதி குறித்த முழு விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

இந்தியாவில் தரம் வாய்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக ஒன்பிளஸ் திகழ்கிறது. இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வந்தன. உடனே அந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் Z, ஒன்பிளஸ் 8 லைட் என பல வதந்திகள் கிளம்பின. இறுதியாக பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனின் பெயர் ஒன்பிளஸ் நார்டு (OnePlus Nord) என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இது பட்ஜெட் விலை என்று முதலில் தகவல்கள் வந்தாலும், பட்ஜெட்டை விடசிறிது அதிக விலைதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விலை நிர்ணயம்:
ஒன்பிளஸ் நார்டு 6ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 24,999.
ஒன்பிளஸ் நார்டு 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 27,999.
ஒன்பிளஸ் நார்டு 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 29,999.

பட்ஜெட் விலையை விட சற்று அதிகமாக இருந்தாலும், ஒன்பிளஸ் தரப்பில் மிகக்குறைந்த விலையில் அறிமுகமாகும் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இதுவே ஆகும். மொத்தம் மூன்று வித நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. 5ஜி நெட்வொர்க் தொழில்நுட்பம், இந்தியாவின் நேவிக் சிஸ்டம் ஆகியவை உள்ளன. 

ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா ( 4 கேமரா) வழங்கப்பட்டுள்ளது.
 

Advertisement

எப்போது விற்பனைக்கு வரும்?
ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் மூன்று வித வேரியண்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 8ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள் மட்டுமே ஆகஸ்ட் 4 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு இன்று (ஜூலை 22) முதல் தொடங்குகிறது.  ரூ.24,999 மதிப்பிலான 6ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள்:
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10 ஆக்ஸிஜன் ஓஎஸ் 10.5
திரை அளவு: 6.44 இன்ச்
திரை: அமோலேட், 90Hz ரெவ்ரேஷ் ரேட்
பாதுகாப்பு: கொரிலா கிளாஸ் 5
கூடுதல் சிறப்பம்சங்கள்: நைட் மோட், ரீடிங் மோட், வீடியோ என்ஹன்சர்
பிராசசர்: குவால்காம் ஸ்நாப்டிராகன் 765G Soc

கேமரா சிறப்பம்சங்கள்:
கேமராவைப் பொறுத்தவரையில் பிரைமரி கேமரா, செல்ஃபி கேமரா இரண்டிலும் 4K வீடியோ எடுக்க முடியும்.  முன்புறத்தில் டூயல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Is OnePlus 8 Pro the perfect premium phone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Built well, comfortable design
  • 90Hz AMOLED display
  • 5G-ready processor
  • Good daylight camera performance
  • Solid battery life
  • Bad
  • Average low-light image quality
 
KEY SPECS
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 765G
Front Camera 32-megapixel + 8-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4115mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Lava Blaze Dragon: ₹10,000-க்குள் இந்தியாவில் லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC உடன் ஜூலை 25 அறிமுகம்!
  2. அறிமுகமானது Samsung Galaxy F36 5G: Circle to Search, Gemini Live - வாங்கலாமா? முழு விவரம்!
  3. இந்தியாவில் Vivo V60 லான்ச் தேதி லீக்! முதல் முறையாக OriginOS - முழு அம்சங்கள், எதிர்பார்ப்புகள்!
  4. அறிமுகமாகிறது Lava Agni 4: புதிய டிசைன், 50MP கேமரா - லீக் ஆன சிறப்பம்சங்கள் மற்றும் விலை இதோ!
  5. அறிமுகமானது Portronics Beem 540 Projector: Android 13 OS, 100 இன்ச் திரை - சலுகையுடன் வாங்குங்க!
  6. iPhone 16-க்கு இவ்வளவு பெரிய தள்ளுபடியா? ₹9,901 குறைப்புடன் Flipkart, Amazon-ல் மாஸ் சலுகைகள்!
  7. அறிமுகமாகிறது Samsung Galaxy F36 5G: Flipkart-ல் உறுதி! இந்த வாரம் லான்ச் - விலை என்னவாக இருக்கும்?
  8. OnePlus 13 அப்டேட்: "Plus Mind" அம்சம் வந்துருச்சு! நினைவாற்றலை அதிகரிக்க புதிய AI வசதி
  9. அறிமுகமானது Vivo X200 FE: 90W ஃபாஸ்ட் சார்ஜிங், Zeiss கேமரா - ஜூலை 23 முதல் விற்பனை!
  10. அறிமுகமானது Vivo X Fold 5: Snapdragon 8 Gen 3 SoC, 6000mAh பேட்டரியுடன் - ஜூலை 30 முதல் விற்பனை!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.