சீன போன் உற்பத்தி நிறுவனமான ஒன்பிளஸ் 2014ஆம் ஆண்டு இந்தியாவில் நுழைந்த போது அமேசானுடன் இணைந்து ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய துவங்கியது. இந்த கூட்டு விற்பனையை தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டதாக திங்களன்று ஒன்பிளஸ் மற்றும் அமேசான்.இன் அறிவித்துள்ளது.
தற்போது ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் ஆஃப்லைனிலும் கிடைக்கிறது. இருப்பினும் அமேசான் ஒன்பிளஸ் உடன் பிரத்தியோகமான கூட்டு விற்பனையாளராக இருந்து வருகிறது. இந்த அறிவிப்பின் மூலம் இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கான ஆஃபர்கள் நவம்.30 ஆம் தேதியிலிருந்து அமேசான்.இன்-ல் தொடங்கப்படும் என்று உறுதி செய்துள்ளது.
ஒன்பிளஸின் ஆஃபர்களை அமேசான்.இன், குரோமா, ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஆஃப்லைன் ஸ்டோர்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டலில் பெற்று கொள்ள முடியும்.
ஒன்பிளஸ் 6 டியினை சிட்டி பேங்கின் டெபிட் மற்றும் கிரேடிட் பயன்படுத்தி வாங்குபவர்களுக்கு ரூ.1500 கேஷ் பேக் வழங்கப்படும்.
ஒன்பிளஸ் மற்றும் ஐபோன் பயன்படுத்தி வருபவர்கள் எக்ஸ்சேன்ஜ் மூலம் ஒன்பிளஸ் டியினை வாங்குபவர்களுக்கு ரூ.3000 தள்ளுபடி வழங்கப்படும். நவம்.30 ஆம் தேதி இந்த ஆஃபர்கள் தொடங்கப்படவுள்ளது. ஆனால், இந்த ஆஃபர்களுக்கான கடைசி தேதி அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து ஒன்பிளஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாளார் விகாஸ் அகர்வால் கூறுகையில், வாடிக்கையாளர் நலனில் அக்கறை கொண்ட ஒன்பிளஸ் மற்றும் அமேசான்.இன் ஆரம்பத்திலிருந்தே ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது.
இத்தனை வருடங்களாக பரஸ்பர நன்மை அடைய இரு நிறுவனமும் ஒன்று சேர்ந்து செயல்பட்டு வந்ததுள்ளது. தற்போது 4 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இனி வரும் வருடங்களிலும் வாடிக்கையாளர் சேவையில் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்