OnePlus நிறுவனம் தனது சக்தி வாய்ந்த Ace 6 ஸ்மார்ட்போனை இந்த மாதம் 27-ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்த தயாராகிவிட்டது
Photo Credit: OnePlus
வரவிருக்கும் OnePlus கைபேசி உலகளவில் OnePlus 15R ஆக அறிமுகப்படுத்தப்படலாம்
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் மாடல்களுக்கு இணையாக, அதிரடி பர்ஃபார்மன்ஸை மட்டுமே குறிவைத்து Ace சீரிஸ் போன்களை வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில், அடுத்த வாரம் சீனாவில் OnePlus Ace 6 ஸ்மார்ட்போன் லான்ச் ஆகிறது. இந்த போன்ல இருக்குற அம்சங்களை நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்ணிக்கிட்டே இருக்கு, அதையெல்லாம் பாத்தா இது ஒரு 'அல்ட்ரா பர்ஃபார்மன்ஸ்' ஃபிளாக்ஷிப் மாடலா இருக்கும்னு தெரியுது. OnePlus Ace 6-ன் மிகப்பெரிய சிறப்பம்சம் அதோட பேட்டரிதான். இது ஒரு பிரம்மாண்டமான 7,800mAh பேட்டரி கெப்பாசிட்டியுடன் வருவதாக கம்பெனியே உறுதி செய்திருக்கு. இதுதான் ஒன்பிளஸ் இதுவரை கொடுத்ததிலேயே மிகப்பெரிய பேட்டரி ஆகும். 120W ஃபாஸ்ட் சார்ஜிங்: இவ்வளவு பெரிய பேட்டரியை சார்ஜ் செய்ய, 120W SUPERVOOC வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருக்கு.
வெறும் 16 நிமிஷத்துல 50% சார்ஜ் ஏறும்னு சொல்லியிருக்காங்க. நீண்ட நேரம் கேமிங்: இந்த பேட்டரி மூலமா தொடர்ந்து 10 மணி நேரத்துக்கு மேல் கேம் விளையாட முடியும்னு உறுதி செய்யப்பட்டிருக்கு. இது கேமர்களுக்கு ஒரு மிகப்பெரிய ப்ளஸ்!
ப்ராசஸர்: இந்த போன், கடந்த வருடம் வெளியான ஃபிளாக்ஷிப் சிப்செட்டான Snapdragon 8 Elite ப்ராசஸரில் இயங்கும்னு எதிர்பார்க்கப்படுது. மேலும், கேமிங் அனுபவத்தை மேம்படுத்த ஒன்பிளஸ்-ன் சொந்த Fengchi Game Core சிப்பும் இதில் இருக்கு.டிஸ்ப்ளே: Ace 6-ல் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஃபிளாட் AMOLED டிஸ்ப்ளே இருக்கு. இது 60Hz முதல் 165Hz வரை மாறும் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate) சப்போர்ட் உடன் வருது. இது கேமிங் மற்றும் நார்மல் பயன்பாட்டுக்கு அருமையான காட்சித் தெளிவை கொடுக்கும்.
கட்டுறுதி: இந்த போன் மெட்டல் மிடில் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது IP66, IP68, IP69 மற்றும் IP69K போன்ற பல விதமான வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங்ஸ் உடன் வருகிறது. இதனால, இதன் நீடித்து உழைக்கும் தன்மை அதிகமாக இருக்கும்.
பாதுகாப்பு: பாதுகாப்பிற்காக இதில் வேகமான அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரின்ட் சென்சார் இருக்கும்.
மற்ற விவரங்கள் மற்றும் வெளியீடு:
கேமரா: இந்த போன்ல 50MP பிரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா செட்டப் இருக்கலாம்னு எதிர்பார்க்கப்படுது.
எப்போ லான்ச்: OnePlus Ace 6, சீனாவில் அக்டோபர் 27 அன்று அறிமுகமாகிறது. சீனாவில் வெளியான பிறகு, இந்த போன் உலகளாவிய சந்தைகளில், குறிப்பாக இந்தியாவில், OnePlus 15R என்ற பெயரில் வரும்னு எதிர்பார்க்கப்படுது.
ஃபிளாக்ஷிப் லெவல் பவர், ரெக்கார்டு பிரேக் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வரப்போற இந்த போன், இந்த வருஷத்தோட மிகவும் எதிர்பார்க்கப்படும் மாடல்கள்ல ஒண்ணா இருக்கு!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Microsoft Patches Windows 11 Bug After Update Disabled Mouse, Keyboard Recovery Mode
Assassin's Creed Shadows Launches on Nintendo Switch 2 on December 2