வெளியானது ஒன்பிளஸ் 7T Pro-வின் அறிமுக தேதி!

ஸ்மார்ட்போனின் நேரடி படங்கள் கசிந்த சில நாட்களுக்குப் பிறகு, இந்த செய்தி வெளியாகியுள்ளது.

வெளியானது ஒன்பிளஸ் 7T Pro-வின் அறிமுக தேதி!

ஒன்பிளஸ் 7T Pro குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் எஸ் ஓ சி ப்ராசஸரால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்
  • ஒன்பிளஸ் 7T Pro, ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் இணைகிறது
  • இது ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டிருக்கலாம்
  • முன்னதாக ஒன்பிளஸ் 7T Pro-வின் புகைப்படங்கள் வெளியானது
விளம்பரம்

ஒன்பிளஸ் 7T Pro மீண்டும் செய்தியாகியுள்ளது, இந்த முறை, அதன் வெளியீட்டு தேதி வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் 2016-ஆம் ஆண்டு முதல் ஸ்மார்ட்போன்களுக்கான இரு வருட புதுப்பிப்பு சுழற்சியை வாடிக்கையாக வைத்துள்ள ஒன்பிளஸ், முதலில் ஒன்பிளஸ் 3 அறிமுகப்படுத்திய பிறகு, ஆண்டின் இரண்டாம் பாதியில் 'T' வகை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது - ஒன்பிளஸ் 3T-யை அடுத்து ஒன்பிளஸ் 5T மற்றும் ஒன்பிளஸ் 6T ஆகியவை இந்த வரிசையில் அடங்கும். இது இந்த ஆண்டு வித்தியாசமாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஒன்பிளஸ் 7 Pro அறிமுகமான இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒன்பிளஸ் 7T Pro ஸ்மார்ட்போன், இந்த பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஸ்மார்ட்போன் அறிமுகங்களை வைத்து பார்க்கையில், இந்த புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகம் அக்டோபரில் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் நேரடி படங்கள் கசிந்த சில நாட்களுக்குப் பிறகு, இந்த செய்தி வெளியாகியுள்ளது.

சாம்சங்-மையப்படுத்திய தொழில்நுட்ப வல்லுனரான மேக்ஸ் ஜே., ட்வீட்டின் படி, ஒன்பிளஸ் 7T Pro அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். நாங்கள் குறிப்பிட்டுள்ளபடி, இது முந்தைய அறிமுகங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளது. முன்னதாக, ஒன்பிளஸ் 6T அக்டோபரிலும், ஒன்பிளஸ் 5T நவம்பரிலும், ஒன்பிளஸ் 3T நவம்பரிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக, அக்டோபர்-நவம்பர் வெளியீட்டு காலக்கெடு எதிர்பாராதது அல்ல. ஒன்பிளஸ் 4T எங்கே காணாமல் போனது என்று நீங்கள் யோசித்தால், ஒன்பிளஸ் சீன மரபுகளைப் பின்பற்றுகிறது, அங்கு 4 ஆம் எண் துரதிர்ஷ்டவசமாக கருதப்படுகிறது, எனவே இந்த வரிசையில் ஒன்பிளஸ் 3T-யை ஆடுத்து நேரடியாக அடுத்த ஆண்டு ஒன்பிளஸ் 5T-யை அறிமுகப்படுத்தியது ஒன்பிளஸ். 

நாங்கள் குறிப்பிட்டுள்ளபடி, ஒன்பிளஸ் 7T Pro அறிமுக தேதி கடந்த வாரத்திலிருந்து ஸ்மார்ட்போனின் இரண்டு நேரடி படங்கள் கசிந்த சில நாட்களுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. முதலில், ஸ்மார்ட்போன் ஒன்ப்ளஸ் 7 Pro-வைப்போலவே வடிவமைப்பைக் கொண்டுள்ளதை அந்த புகைப்படத்தில் காணலாம். முதல் புகைப்பட கசிவு ஸ்மார்ட்போனை முன்பக்கத்தை மட்டுமே காண்பித்தது. அந்த ஸ்மார்ட்போனில் நாட்ச் கேமரா இல்லை. இது இந்த ஸ்மார்ட்போன் பாப்-அப் கேமரா கொண்டுள்ளதை உணர்த்துகிறது.

இரண்டாவது நேரடி படங்களின் கசிவு ஒன்ப்ளஸ் 7T Pro-வின் முன் பகுதி, பின் பகுதி என இரண்டையும் காட்டியது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, மீண்டும் இது ஒன்ப்ளஸ் 7 Pro-வையே நினைவு படுத்துகிறது. மேலும், ஒன்பிளஸ் 7T Pro குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் எஸ் ஓ சி ப்ராசஸரால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மற்றும் ஒன்பிளஸ் 7 Pro  ஸ்னாப்டிராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டிருக்க, இந்த ஸ்மார்ட்போன்களுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு இதுவாக இருக்கலாம். பிற சிறப்பம்சங்கள் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஒன்றுபோலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. WhatsApp Group-களில் இப்போ @all யூஸ் பண்ணலாம்! முக்கியமான அறிவிப்புகள் இனி எல்லாருக்கும் உடனே போகும்!
  2. JioSaavn-ல் விளம்பரம் இல்லாம பாட்டு கேட்க ஆசையா? ரூ.399-க்கே 1 வருடம் சப்ஸ்கிரிப்ஷன்
  3. iQOO 15-ன் பர்ஃபார்மன்ஸை இனி இந்தியாவிலும் பார்க்கலாம்! Snapdragon 8 Elite Gen 5, OriginOS 6 உடன் நவம்பரில் வருகிறது!
  4. OnePlus-ன் கேமிங் ராட்சசன்! Ace 6-ல் இதுதான் டாப்: Snapdragon 8 Elite, 165Hz ஸ்கிரீன், ரெக்கார்டு பிரேக் பேட்டரி
  5. மார்க்கெட்டையே அதிரவைக்க iQOO ரெடி! Neo 11-ல் இத்தனை அம்சங்களா? 2K டிஸ்ப்ளே, Snapdragon சிப், 100W சார்ஜிங்!
  6. கேமரா, பேட்டரி, பர்ஃபார்மன்ஸ் – எல்லாத்துலேயும் டாப்! Realme GT 8 Pro லான்ச்! விலையோ ₹49,440-ல் இருந்து ஆரம்பம்
  7. Samsung Galaxy XR ஹெட்செட் அறிமுகம் – Snapdragon XR2+ Gen 2, AI திறன்! வாங்க ரெடியா?
  8. கேமிங் பிரியர்களுக்கு விருந்து! iQOO 15 வந்துருச்சு – 100x Zoom, மூணு 50MP கேமரா!
  9. வாட்ஸ்அப் யூசர்களே, இனி ChatGPT வேலை செய்யாது! WhatsApp-ன் புதிய விதிமுறைகள்
  10. Redmi K90: 7,100mAh பேட்டரி, Bose ஆடியோ உடன் அக்டோபர் 23ல் அறிமுகம்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »