பல முன்னனி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் நிலையில் ஓன்பிளஸ் தயாரிப்பில் அடுத்ததாக ஒரு அதிரடி ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரால் இயங்குகின்ற இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட தொழில்நுட்பத்துடன் வெளியாகவில்லை. தற்போது கசிந்துள்ள தகவல்படி ஓன்பிளஸ் 7 போனின் டிசைன் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வெளியாகியுள்ள தகவல் படி விவோ போன்களில் உள்ள பாப்-அப் செல்ஃபி கேமராக்கள் மற்றும் மூன்று பின்புற கேமராக்கள் இந்த போனிலும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த போனின் பின்புறத்தில் பளபளக்கும் கண்ணாடி அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த புதிய ஓன்பிளஸ் மாடலில் வால்யூம் பட்டன் இடது புறத்திலும் பவர் மற்றும் நேவிகேஷன் பட்டன் வலது புறத்திலும் அமைந்துள்ளது. போனின் ரேம், சேமிப்பு வசதி மற்றும் பேட்டரி போன்ற பல முக்கிய தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் இந்த போன் 6.5 இஞ்ச திரை கொண்டு வரும் என எதிர்பார்கப்படுகிறது.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல இந்த போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸ்சர் இடம்பெறும் என்றும் இதில் 5ஜி தொழில்நுட்பம் வெளியாகாது என்றும் தெரியவந்துள்ளது. தகவல் வெளியாகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்