ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன் கடந்த மே மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்போனில், 6GB RAM + 128GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் சாம்பல் (Mirror Grey) வண்ணத்திலும் 8GB RAM + 256GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் சாம்பல் (Mirror Grey) மற்றும் சிவப்பு என இரண்டு வண்ணங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னிலையில் அமேசான் நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. 6GB RAM + 128GB சேமிப்பு வகை கொண்ட 'ஒன்ப்ளஸ் 7' ஸ்மார்ட்போன் மிரர் ப்ளூ (Mirror Blue) என்ற புதிய வண்ணத்தில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கென ஒரு பிரத்யேகமாக பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமேசான் நிறுவனம், ஜூல 15 அன்று துவங்கவுள்ள பிரைம் டே விற்பனையில் இடம் பெற்றிருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
'ஓன்ப்ளஸ் 7' - 'மிரர் ப்ளூ' வகை: விலை, விற்பனை!
இந்த ஸ்மார்ட்போன் அமேசான் நிறுவனத்தின் தளத்தில் ஜூலை 15 அன்று நள்ளிரவு 12 மணிக்கே விற்பனைக்கு வைக்கப்படும் என அமேசான் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்டு மிரர் ப்ளூ (Mirror Blue) வண்ணத்தில் வெளியாகும் 'ஓன்ப்ளஸ் 7' ஸ்மார்ட்போனின் விலை 32,999 ரூபாய் எனவும் கூறியுள்ளது. அதுமட்டுமின்றி எச்.டி.எஃப்.சி கார்டுகளுக்கு 3,500 ரூபாய் தள்ளுபடியையும் அறிவித்துள்ளது.
முன்னதாக அறிமுகத்தின்போது, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ஒன்ப்ளஸ் 7 32,999 ரூபாய் என்ற விலையிலும், 8GB RAM + 256GB சேமிப்பு அளவுகொண்ட ஒன்ப்ளஸ் 7 37,999 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமானது. 6GB RAM + 128GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் சாம்பல் (Mirror Grey) வண்ணத்திலும் 8GB RAM + 256GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் சாம்பல் (Mirror Grey) மற்றும் சிவப்பு ஆகிய இரண்டு வண்ணங்களிலும் அறிமுகமானது.
ஒன்ப்ளஸ் 7: சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதியை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராஉட் 9.0 பை(Android 9.0 Pie) அமைப்பைக்கொண்ட இந்த ஸ்மார்போன் ஆக்சிஜன் ஓ எஸ்(OxygenOS) கொண்டு செயல்படும். 8GB வரையிலான RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது.
6.41-இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும் இந்த ஒன்ப்ளஸ் 7-னில் 90Hz திரை புதுப்பிப்பு விகிதம்(refresh rate) கொண்டு வுள்ளது. மேலும் 19.5:9 என்ற திரை விகிதத்தையும், 402ppi பிக்சல் டென்சிடியையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கொரில்லா கிளாஸ் 6 பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஜென் மோட், மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டிங் வசதியும் உள்ளது.
இரண்டு பின்புற கேமராக்களை மட்டுமே கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 48 மேகாபிக்சல் மற்றும் 5 மேகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது இந்த இரண்டு கேமராக்கள். இந்த ஸ்மார்ட்போனில் 16 மேகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா இருக்கும். இந்த செல்பி கேமரா, முன்பகுதியில் ஒரு சிறய நாட்ச் கொடுக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒன்ப்ளஸ் 7-வில் 3700mAh பேட்டரி அளவு கொண்ட பேட்டரி, டைப்-C சார்ஜ் போர்ட், அதிவேக வார்ப் சார்ஜர் 20(5V/ 4A) கொண்டு வெளியாகும் என அறிவித்துள்ளது. 157.7x74.8x8.2mm போன்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 182 கிராம் எடை கொண்டுள்ளது.
இன்னும் பல வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 4G VoLTE மற்றும் வை-பை வசதி கொண்டும் மற்றும் ப்ளூடூத் v5.0 கொண்டும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்