ஓன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த அறிமுகமான 'ஓன்பிளஸ் 7' என பலர் எதர்பார்த்து வரும் நிலையில் அந்த ஸ்மார்ட் போனை பற்றிய சில தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த போன் குறித்து ஒரு தகவல் கூட கசியக் கூடாது என்று ஒன்பிளஸ் நிறுவனம் கடுமையாக ரகசியம் காத்து வரும் நிலையில், அதன் கேமரா மற்றும் டிஸ்பிளேவின் மாடல் எப்படி இருக்கும் என தெரிந்துள்ளது.
மேலும், நமக்கு வந்த தகவல்படி, வரும் மே மாதம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்து வைக்கப்படப் போவதாகவும், ஓன்பிளஸ் 7-ஐப் பொறுத்தவரை, அதன் கேமரா 'ஓன்பிளஸ் 6T'-ஐப் போலவே இருக்கும் எனப்படுகிறது. அதன் வெளிப்புற அமைப்பை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஸ்லைடர் மாடலில் இருக்குமோ என்ற எதிர்பார்பை உருவாக்கியுள்ளது.
இதற்கு முன்னர் ஓப்போ நிறுவனம், ஸ்லைடர் வகை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. ஓப்போவின் ஃவையிண்டு x மாடல் ஸ்மார்ட்போன் மோட்டரைசியிடு ஸ்பைடருடன் வெளியாகி இருந்தது.
மேலும் ஓன்பிளஸ் இந்தாண்டு இரண்டு புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தவுள்ள நிலையில், அந்நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட் போனையும் இந்தாண்டு அறிமுகப்படுத்த உள்ளது. ஓன்பிளஸ்சின் இந்த அதிரடி 5ஜி ஸ்மார்ட்போன் ஓன்பிளஸ் 6T யை விட 200 டாலர் முதல் 300 டாலர் வரை விலை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.