Photo Credit: Twitter/ OnePlus
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன் பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடும், இந்திய வெளியீடும் ஒரே நேரத்தில் வரும் அக்.30 ஆம் தேதி நடைபெற உள்ளது. முந்தைய மாடளுடன் ஒப்பிடுகையில், சிறு மேம்படுத்தல்களுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி-யில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்பிளே உள்ளிட்ட சில மாற்றங்கள் செய்யப்படுள்ளன.
ஒன் பிளஸ் 6டி-யில் புதிய பயனர் இடைமுகம் (UI) கொண்டுள்ளது என ஒன்பிளஸ் நிர்வாகி உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும், கேமராவில் சாப்ட்வேர்களும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஒன் பிளஸ் தயாரிப்பு மேலாளர் சைமோன் கோபக் கூறும்போது, வேகமான மற்றும் மென்மையான பயன்பாட்டை தருவதில் தான் எங்களது முழு கவனமும் உள்ளது. நாங்கள் இதற்காக தனித்துவம் மிக்க ஃப்எஸ்இ (FSE) குழுவை கொண்டுள்ளோம்.
அதாவது வேகமான, மென்மையான மற்றும் ஆற்றல்மிக்க என்பதாகும். இவர்களின் இலக்கு என்பது எங்களது வன்பொருளை உருவாக்குவது. டூ நாட் டிஸ்டர்ப் மோட், நேவிகேஷன் உள்ளிட்ட சில மேம்பட்ட கூடுதல் அம்சங்களை இதில் எதிர்ப்பார்க்கலாம்.
ஒன்பிளஸ் 6டி ஆனது ஆக்ஸிஜென் ஓஎஸ் இயங்குதளத்தில் இயங்குகிறது. மேலும், இதில் புதிய பயனர் இடைமுகம் (UI) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமராவின் அம்சங்களை உயர்த்தும் வகையில் பல வேலைகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறப்பான புகைப்படங்களை 6டியில் பெறலாம்.
இதைத்தவிர்த்து, ஒன்பிளஸ் 6டி குவல்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மூலம் கூடுதல் வசதிகள் கிடைக்கிறது. இது தூங்கும் நேரத்தை கணித்து பின்னால் இயங்கும் செயல்பாட்டுகளை நிறுத்தி வைக்கிறது. இதன் மூலம் பேட்டரி பவர் நுகர்வு குறைவாகிறது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அமேசானிலும் ரூ.1000 செலுத்தி ஒன்பிளஸ் 6டி-க்கான முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு யூஎஸ்பி டைப் சி ஹெட்செட் இலவசமாக கிடைக்கிறது. மேலும் அமேசான் பே கேஷ்பேக் ரூ.500-ம் கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்