Photo Credit: WinFuture.de
இன்னும் சில நாட்களில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. அதன் முறையான வெளியிட்டிற்கு முன்னதாகவே ஜெர்மன் இணையதளமான ஒட்டோவில் ஒன்பிளஸ் 6டி காணப்பட்டுள்ளது. அந்த ஆன்லைன் விற்பனை வரிசையின் மூலம் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6டி குறித்த விலை மற்றும் சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது.
முன்னதாக இன்று, ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் ஒன்பிளஸ் 6டி யை கடைகளில் விற்பனை செய்வதற்கான ஒன்பிளஸ் உடனான கூட்டணியை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் 6டி அக்.30ல் வெளியாகிறது.
ஒட்டோ இணையதளம் பட்டியலின் படி, தொழில்நுட்ப பதிவர் கார்ஸ்டென் கேஸி, ஐரோப்பாவில் அறிமுகமாகியுள்ள ஒன்பிளஸ் 6டி 8ஜிபி ரேம் மற்றும் 128 மெமரி வேரியன்டின் விலையானது EUR 569 (தோராயமாக ரூ.48,000) ஆகும்.
டூயல் சிம் கொண்ட ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 8.1 ஒடியோ கொண்டு இயங்குகிறது. 6.41 இன்ச் புல்-எச்.டி+அமோல்ட் டிஸ்பிளை (1080x2340 பிக்ஸெல்ஸ்) 19.5:9 அக்ஸப்ட் ரேஸியோ கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 845, 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் உடன் 256 ஜிபி வரை மெமரி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்பக்கம் 16-மெகா பிக்ஸெல்ஸ் பிரைமரி சென்சார் மற்றும் 16-மெகா பிக்ஸெல்ஸ் செகன்டரி சென்சார் கொண்ட டூயல் கேமரா செட்டப் கொண்டுள்ளது. முன்பக்கம் 16-மெகா பிக்ஸெல்ஸ் சென்சார் கொண்டுள்ளது. மேலும் இதில், எச்டிஆர் இமேஜ் மற்றும் புதிய நைட் மோட் உள்ளது.
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனானது 4G LTE, வைபை 802.11ac, ப்ளூடுத் v5.0, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்ஃப்சி, யூஎஸ்பி - டைப் சி கொண்டுள்ளது. மேலும், இந்த போன் 3,700mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது என கூறப்படுகிறது.
இந்த கட்டுரையை எழுதும் நேரத்தில் ஒட்டோ இணைதளம் 404 ஏரர் காட்டப்பட்டது என கேஸி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு ஒரியோவில் இருந்து ஆண்ட்ராய்டு 9.0 பையில் ஆக்சிஜன் ஒஎஸ் உடன் இயங்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்