ஐரோப்பாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 6டி, விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6டி குறித்த விலை மற்றும் சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது

ஐரோப்பாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 6டி, விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Photo Credit: WinFuture.de

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகமாகவுள்ளது.

ஹைலைட்ஸ்
  • ஜெர்மன் விற்பனையாளர் இணையதளமான ஒட்டோவில் ஒன்பிளஸ் 6டி காணப்பட்டுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் 6.41 இன்ச் புல்-எச்.டி+அமோல்ட் டிஸ்பிளை கொண்டுள்ளது.
  • மேலும் இதில், எச்டிஆர் இமேஜ் மற்றும் புதிய நைட் மோட் உள்ளது.
விளம்பரம்

 

இன்னும் சில நாட்களில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. அதன் முறையான வெளியிட்டிற்கு முன்னதாகவே ஜெர்மன் இணையதளமான ஒட்டோவில் ஒன்பிளஸ் 6டி காணப்பட்டுள்ளது. அந்த ஆன்லைன் விற்பனை வரிசையின் மூலம் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6டி குறித்த விலை மற்றும் சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது. 

முன்னதாக இன்று, ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் ஒன்பிளஸ் 6டி யை கடைகளில் விற்பனை செய்வதற்கான ஒன்பிளஸ் உடனான கூட்டணியை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் 6டி அக்.30ல் வெளியாகிறது.

ஒட்டோ இணையதளம் பட்டியலின் படி, தொழில்நுட்ப பதிவர் கார்ஸ்டென் கேஸி, ஐரோப்பாவில் அறிமுகமாகியுள்ள ஒன்பிளஸ் 6டி 8ஜிபி ரேம் மற்றும் 128 மெமரி வேரியன்டின் விலையானது EUR 569 (தோராயமாக ரூ.48,000) ஆகும். 

டூயல் சிம் கொண்ட ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 8.1 ஒடியோ கொண்டு இயங்குகிறது. 6.41 இன்ச் புல்-எச்.டி+அமோல்ட் டிஸ்பிளை (1080x2340 பிக்ஸெல்ஸ்) 19.5:9 அக்ஸப்ட் ரேஸியோ கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 845, 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் உடன் 256 ஜிபி வரை மெமரி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பின்பக்கம் 16-மெகா பிக்ஸெல்ஸ் பிரைமரி சென்சார் மற்றும் 16-மெகா பிக்ஸெல்ஸ் செகன்டரி சென்சார் கொண்ட டூயல் கேமரா செட்டப் கொண்டுள்ளது. முன்பக்கம் 16-மெகா பிக்ஸெல்ஸ் சென்சார் கொண்டுள்ளது. மேலும் இதில், எச்டிஆர் இமேஜ் மற்றும் புதிய நைட் மோட் உள்ளது. 

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனானது 4G LTE, வைபை 802.11ac, ப்ளூடுத் v5.0, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்ஃப்சி, யூஎஸ்பி - டைப் சி கொண்டுள்ளது. மேலும், இந்த போன் 3,700mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது என கூறப்படுகிறது.

இந்த கட்டுரையை எழுதும் நேரத்தில் ஒட்டோ இணைதளம் 404 ஏரர் காட்டப்பட்டது என கேஸி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு ஒரியோவில் இருந்து ஆண்ட்ராய்டு 9.0 பையில் ஆக்சிஜன் ஒஎஸ் உடன் இயங்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த போன் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


 

 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks good
  • Big, vibrant screen
  • All-day battery life
  • Excellent, up-to-date software
  • Bad
  • Disappointing low-light camera quality
  • Awkward and slow fingerprint sensor
  • No IP rating, wireless charging, or 3.5mm jack
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3700mAh
OS Android 9.0
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. நீங்க எதிர்பார்த்த YouTube அப்டேட் வந்தாச்சு! வீடியோ பிளேயரில் 'Liquid Glass' டிசைன், கமெண்ட்ஸில் திரட்டப்பட்ட பதில்கள்!
  2. இந்தியாவில் வெளியான பிறகு, ரஷ்யாவில் புதிய சிப்செட்-டுடன் களமிறங்கிய iQOO Z10R 5G!
  3. Apple M5 MacBook Pro லான்ச் டீஸ்: தேதி, எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை விவரம்
  4. மிரள வைக்கும் சிறப்பம்சங்கள்! Realme GT 8 & GT 8 Pro அக்டோபர் 21-ஆம் தேதி லான்ச் கன்ஃபார்ம்
  5. சாம்சங், ஆப்பிளுக்கு சவால் விட வந்த மோட்டோ! 6mm ஸ்லிம்ல 4800mAh பேட்டரி - Moto X70 Air அதிரடி
  6. ஆடியோ பிரியர்களே, தயாரா? Vivo TWS 5 Series வந்துவிட்டது! ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 மணிநேர Playtime
  7. NotebookLM: ஆராய்ச்சி மற்றும் குறிப்புகள் இனி வண்ணமயமாக! உங்கள் குறிப்புகளுக்குப் புத்தம் புதிய வீடியோ வடிவம்!
  8. நீண்ட கட்டுரைகளை இனி படிக்க வேண்டாம்! Google Chrome for Android-ல் Gemini AI மூலம் 'Summarise Page' ஆப்ஷன் ரோல் அவுட்!
  9. Realme GT 8 Pro-வில் ஒரு ஆச்சரியம்! Ricoh கேமராவுடன் இணைந்து ஒரு புதிய Feature
  10. ஐபோன் (iPhone) ரசிகர்களுக்கு செம்ம குட் நியூஸ்! Foldable iPhone-ன் முக்கிய பாகமான ஹிஞ் விலை குறைகிறது
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »