Photo Credit: Twitter/ Ishan Agarwal
ஒன்பிளஸ் 6டி(ரூ.36,999) இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கும் நிலையில், அதன் படங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் கசிந்துள்ளன. இந்த படங்களை வெளியிட்டவருக்கு நிச்சயம் நன்றி சொல்லியே ஆகவேண்டும். அவரால்தான் தற்போது 6டி-யின் முக்கிய அம்சம் குறித்து முன்னதாக தெரிந்து கொள்ள முடிந்தது. வெளிவந்த தகவல்களின் படி, ஒன்பிளஸ் 6 போனிலிருந்து பல மாறுதல்கள் 6டியில் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆண்ட்ராய்டு ஓரியோவிற்கு பதிலாக ஆண்ட்ராய்டு 9.0 பை உள்ளதாக ஜெர்மன் விற்பனையாளர் தன்னுடை இணையத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒன்பிளஸ் 6டியின் பல விளம்பர படங்கள் வெளியாகி உள்ள நிலையில், அதில் பிங்கர் பிரிண்ட் சென்சார், வாட்டர் டிராப் நாட்ச், இருப்பதாக தெரிகிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் 6டி வருகின்ற 30ஆம் தேதி வெளிவர உள்ளது. உலகம் முழுவதும் அக்.29ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
டூயல் சிம் கொண்ட ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 8.1 ஒடியோ கொண்டு இயங்குகிறது. 6.41 இன்ச் புல்-எச்.டி+அமோல்ட் டிஸ்பிளை (1080x2340 பிக்ஸெல்ஸ்) 19.5:9 அக்ஸப்ட் ரேஸியோ கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 845, 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் உடன் 256 ஜிபி வரை மெமரி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்பக்கம் 16-மெகா பிக்ஸெல்ஸ் பிரைமரி சென்சார் மற்றும் 16-மெகா பிக்ஸெல்ஸ் செகன்டரி சென்சார் கொண்ட டூயல் கேமரா செட்டப் கொண்டுள்ளது. முன்பக்கம் 16-மெகா பிக்ஸெல்ஸ் சென்சார் கொண்டுள்ளது. மேலும் இதில், எச்டிஆர் இமேஜ் மற்றும் புதிய நைட் மோட் உள்ளது.
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனானது 4G LTE, வைபை 802.11ac, ப்ளூடுத் v5.0, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்ஃப்சி, யூஎஸ்பி - டைப் சி கொண்டுள்ளது. மேலும், இந்த போன் 3,700mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது என கூறப்படுகிறது. இதன் எடை 157.5*74.9*8.3mm மற்றும் 180 கிராம்.
இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் ஒன்பிளஸ் 6டி குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமானதல்ல. இருப்பினும் இதிலிருக்கும் சில முக்கிய அம்சங்கள் ஒன்பிளஸ் 6டியில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்