சாம்சங், ரெட்மி போன்களுக்கு போட்டியாக ஒன்பிளஸ் போன்களும் இந்திய சந்தையில் களமிறங்கியுள்ளன.
ஆப்பிள் போன்களில் உள்ள அம்சங்களை பெருமளவு கொண்டிருக்கும் ஒன்பிளஸ் போன்களை மக்கள் இப்போது ஆவலாக வாங்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 6 போன் தற்போது வெளியாகியுள்ளது.
ஒன்ப்ளஸ் 6 போனின் சிறப்பம்சங்கள்: 6.28 இன்ச் 2280 X 1080 பிக்சல் ரெசொல்யூஷன் ஃபுல் எச்டி பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 5, 2.8 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 ஜிபியு, ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1, 16 எம்பி + 20 எம்பி பின்புற கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா, கைரேகை ஸ்கேனர், வாட்டர் ரெசிஸ்டன்ஸ், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடுத், யூஎஸ்பி டைப் சி போர்ட், 3300 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட போன் ரூ. 34,999 மற்றும் 8 ஜிபி ரேம், 128 இன்டர்னல் மெமரி ரூ. 34,999 என்றும் 8ஜிபி ரேம், 256 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட மார்வல் அவென்ஜர்ஸ் லிமிடெட் எடிஷன் ரூ. 44,999 என்ற விலையில் கிடைக்கிறது.
இந்தியா முழுவதும் உள்ள குரோமா விற்பனை நிலையங்கள், ஒன்பிளஸ் பாப் அப் ஸ்டோர் மற்றும் அமேசான் ஆன்லைன் ஸ்டோரில் இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது.
Is OnePlus 6 an iPhone X killer at half the price? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்