அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026-ல் லேப்டாப்கள் மீது பிரம்மாண்டமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாணவர்கள் மற்றும் ப்ரோகிராமர்களுக்கான சிறந்த லேப்டாப் டீல்களை இங்கே காணலாம்.
Photo Credit: Amazon
அமேசான் இந்தியா ஜனவரி 16, 2026 அன்று தொடங்கும் கிரேட் குடியரசு தின விற்பனையை அறிவித்துள்ளது.
காலேஜ் போறீங்களா? இல்ல வீட்ல இருந்து ஒர்க்-ஃப்ரம்-ஹோம் பண்றீங்களா? "ஒரு நல்ல லேப்டாப் வாங்கணும், ஆனா பட்ஜெட் இடிக்குதே" அப்படின்னு யோசிச்சுட்டு இருந்தீங்கன்னா, இதோ உங்களுக்கான நேரம் வந்தாச்சு! அமேசானோட Great Republic Day Sale 2026 அறிவிக்கப்பட்டுடுச்சு. இதுல மத்த எல்லாத்தையும் விட லேப்டாப் செக்ஷன்ல தான் ஆஃபர்கள் சும்மா அள்ளித் தெளிக்கப்போறாங்க. ஜனவரி 15-ம் தேதி பிரைம் மெம்பர்களுக்கும், 16-ம் தேதி எல்லாருக்கும் இந்த விற்பனை ஆரம்பமாகுது. வாங்க, எந்தெந்த லேப்டாப் எவ்வளவு விலையில கிடைக்குதுன்னு விலாவாரியா பார்ப்போம்.
எப்போதுமே ஆப்பிள் லேப்டாப் வாங்கணும்ன்றது பல பேரோட கனவா இருக்கும். இந்த சேல்ல MacBook Air M2 மற்றும் M3 மாடல்கள் மீது ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை நேரடி வங்கித் தள்ளுபடி கிடைக்குது. நீங்க HDFC அல்லது SBI கார்டு வச்சிருந்தா, இந்த ஆஃபரை தாராளமா பயன்படுத்திக்கலாம். ஒரு பிரீமியம் லேப்டாப், அதுவும் லாங் லைஃப் வரும்னு நினைக்கிறவங்க மேக்புக் பக்கம் போறது தான் புத்திசாலித்தனம்.
ரூ.30,000 லிருந்து ரூ.45,000 பட்ஜெட்ல ஒரு நல்ல லேப்டாப் தேடுறீங்களா? அப்போ HP 15s மற்றும் Dell Vostro வரிசை லேப்டாப்களை பாருங்க. இதுல i3 மற்றும் i5 ப்ராசஸர் இருக்குற மாடல்களுக்கு 35% வரை தள்ளுபடி கிடைக்குது. ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்றதுக்கும், பேசிக் கோடிங் பண்றதுக்கும் இது ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். முக்கியமா இதுல 16GB RAM இருக்குற வேரியண்ட்களை கம்மி விலையில வாங்க இதுதான் சரியான சான்ஸ்.
கேம் விளையாடுறதுக்கும், வீடியோ எடிட்டிங் பண்றதுக்கும் பவர்ஃபுல் லேப்டாப் வேணுமா? ASUS TUF Gaming மற்றும் HP Victus லேப்டாப்கள் மீது 40% வரை தள்ளுபடி இருக்கு. RTX 3050 அல்லது RTX 4050 கிராபிக்ஸ் கார்டு இருக்குற லேப்டாப்கள் இப்போ ரூ.55,000 பட்ஜெட்டுலேயே கிடைக்குது. இதுமட்டுமில்லாம, உங்க பழைய லேப்டாப்பை கொடுத்துட்டு புதுசு வாங்கணும்னு நினைச்சீங்கன்னா, ரூ.20,000 வரைக்கும் எக்ஸ்சேஞ்ச் வேல்யூ கிடைக்குது.
அமேசான்ல இந்த தடவை "No-Cost EMI" வசதி எல்லா டாப் லேப்டாப் பிராண்டுகளுக்கும் இருக்கு. அதாவது நீங்க வட்டி இல்லாம மாசம் ஒரு சின்ன தொகையை கட்டி லேப்டாப் வாங்கிக்கலாம். கூடவே "Amazon Pay ICICI" கார்டு வச்சிருந்தா அன்லிமிட்டட் 5% கேஷ்பேக் கிடைக்கும். SBI கார்டு யூஸ் பண்றவங்களுக்கு 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் தனி!
லேப்டாப்ங்கிறது இப்போ ஒரு அத்தியாவசிய பொருளா ஆயிடுச்சு. அதனால நல்ல குவாலிட்டியான லேப்டாப்பை கம்மி விலையில வாங்க இந்த அமேசான் ரிபப்ளிக் டே சேலை மிஸ் பண்ணிடாதீங்க. ஸ்டாக் சீக்கிரமே தீர்ந்துடும், அதனால இப்போவே உங்க விஷ்லிஸ்ட்ல (Wishlist) சேர்த்து வச்சுக்கோங்க. இந்த லேப்டாப் டீல்கள்ல உங்களுக்கு எது ரொம்ப பிடிச்சிருக்கு? மேக்புக்கா இல்ல கேமிங் லேப்டாப்பா? கமெண்ட்ல சொல்லுங்க மக்களே.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Redmi Note 15 Pro 5G India Launch Seems Imminent After Smartphone Appears on Geekbench