Oneplus நிலையான சேனல் வழியாக OnePlus 6 மற்றும் OnePlus 6T-க்கான OxygenOS 10.0-ன் வெளியீட்டைத் தொடங்கியுள்ளது. இரண்டு தொலைபேசிகளையும் ஆண்ட்ராய்டு 10-க்கு மேம்படுத்துகிறது. OnePlus 6 மற்றும் 6T-க்கான OxygenOS 10.0-ன் வெளியீடு தற்போது நடந்து வருகிறது. சிக்கல்கள் அல்லது பெரிய பிழைகள் எதுவும் இல்லை என்று ஒரு உத்தரவாதம் உள்ளது. இதன் பரந்த வெளியீடு விரைவில் தொடங்கும்.
OnePlus 6 மற்றும் 6T-க்கான OxygenOS 10.0-ன் வெளியீடு முதலில் ஆண்ட்ராய்டு பொலிஸால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் பதிவின் வழியாக அறிவிக்கப்பட்டது. OnePlus 6 மற்றும் 6T பயனர்களில் ஒரு சிறிய தொகுதி மட்டுமே OxygenOS 10.0 அப்டேடைப் பெறும் என்று பதிவு குறிப்பிடுகிறது. மேலும், OxygenOS -ன் சமீபத்திய உருவாக்கத்தைப் பதிவிறக்குவதற்கு VPN பயன்படுத்தினால் இயங்காது. ஏனெனில் அப்டேட் எந்தவொரு பிராந்திய விருப்பத்தையும் பொருட்படுத்தாமல், சிறிய எண்ணிக்கையிலான OnePlus 6 மற்றும் 6T பயனர்களுக்கு தோராயமாக வழங்குகிறது.
OxygenOS 10.0 அப்டேட்டால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களைப் பற்றி பேசுகையில், இது ஒரு புதிய UI design மற்றும் customisation ஆப்ஷன்ஸ்களைக் கொண்டுவருகிறது. இது Quick Settings shade-ல் தோன்றும் Icon வடிவங்களைத் தேர்வுசெய்ய பயனர்களை அனுமதிக்கிறது. இந்த அப்டேட் தனியுரிமைக் கட்டுப்பாடுகள் மற்றும் Android 10-ன் navigation gestures-கான ஆதரவையும் அறிமுகப்படுத்துகிறது. பயனர்கள் சைகையை மீண்டும் செயல்படுத்த பக்கங்களில் இருந்து உள்நோக்கி ஸ்வைப் செய்ய அனுமதிக்கிறது. மேலும், செயலி மாறுதலுக்காக கீழே ஒரு வழிசெலுத்தல் பட்டியையும் (navigation bar) சேர்க்கிறது.
OnePlus 6 மற்றும் 6T-க்கான OxygenOS 10.0 அப்டேட் சிறந்த விளையாட்டு மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த கேமிங் அனுபவத்திற்கான புதிய கேம் ஸ்பேஸ் அம்சத்தையும் அறிமுகப்படுத்துகிறது. Ambient டிஸ்பிளேவுக்கான Contextual டிஸ்பிளே கருவியும் வந்துவிட்டது. நேரம் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் தொடர்புடைய தகவல்களைப் பார்க்க பயனர்களை அனுமதிக்கிறது. அப்டேட் முக்கிய வார்த்தைகளால் ஸ்பேம் செய்திகளைத் தடுக்கும் திறனையும் சேர்க்கிறது. இருப்பினும், OxygenOS-ன் சமீபத்திய உருவாக்கம் தற்போது உச்சநிலையை மறைக்க விருப்பம் இல்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்