ஒன்பிளஸ் நிறுவனம் தங்களுடைய ஸ்மார்ட் போன்களில் சாப்ட்வேர் மற்றும் செக்கியூரிட்டி அப்டேட்களை உடனுக்குடன் கொண்டு வந்துவிடும். இந்தியாவில் ஆண்ட்ராய்டு பையை பெற்றிருக்கும் ஒரு சில போன்களில் ஒன்பிளஸ்6 (ரூ34,999) ஒன்றாகும். இந்நிறுவனம் தங்களுடைய பிற ஸ்மார்ட்போன்களான, ஒன்பிளஸ் 3, ஒன்பிளஸ் 3டி, ஒன்பிளஸ்5 (ரூ.35,999) மற்றும் ஒன்பிளஸ் 5டி (ரூ.37,999) ஆகியவற்றையும் ஆண்ட்ராய்டு பையாக அப்டேட் செய்வதாக கூறியிருந்தது. ஆனால், தற்போது இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 6டி குறித்து அதன் சிஇஓ பேசுகையில், ஒன்பிளஸ் 3, ஒன்பிளஸ் 3டி, ஒன்பிளஸ் 5 மற்றும் ஒன்பிளஸ் 5டி போன்களில் ஆண்ட்ராய்டு பையினை அப்டேட் செய்ய டெவலப்பர்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இதில் ஒன்பிளஸ் 3/3டி இந்த இரு போன்களும் பழைய மாடல் என்பதால், அப்டேட் செய்வதில் இருக்கும் சிக்கல்களை உணரமுடியும். இருப்பினும் ஒன்பிளஸ் 5/5டி பயன்படுத்துபவர்களை தான் இது மிகவும் ஏமாற்றமடையச் செய்யும் என்று கூறினார்.
ஒன்பிளஸ் நிறுவனம் ஜூலை மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அதில், ஒன்பிளஸ் 3/3டி-யில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவினை விடுத்து நேரடியாக ஆண்ட்ராய்டு பைக்கு அப்டேட் செய்யப்போவதாக கூறியது. அதன்பிறகு, ஒன்பிளஸ் 6, ஒன்பிளஸ்5/5டி, ஒன்பிளஸ் 3/3டியில் ஆண்ட்ராய்டு பை அப்டேட் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாயின, ஆனால் தற்போது ஒன்பிளஸ் 6ல் ஆண்ட்ராய்டு பை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 5/5டி மற்றும் 3/3டி அப்டேட்டிற்காக காத்திருக்கின்றன.
ஒன்பிளஸ் 6டி ஆண்ட்ராய்டு பையினை பெற்றிருக்கும். இது வரும் 30ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்