OnePlus 15: 7,300mAh Battery, 120W Charging உடன் இந்தியாவில் அறிமுகம்

OnePlus 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ₹72,999 ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது

OnePlus 15: 7,300mAh Battery, 120W Charging உடன் இந்தியாவில் அறிமுகம்

Photo Credit: OnePlus

OnePlus 15 ₹72,999; Snapdragon 8 Gen5, 7300mAh, 120W, 165Hz, Triple 50MP.

ஹைலைட்ஸ்
  • OnePlus 15 இந்தியாவில் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் உடன் அறிமுகமான ம
  • 7,300mAh Silicon-Carbon Battery மற்றும் 120W SuperVOOC வயர்டு சார்ஜிங் உள
  • IP69K உள்ளிட்ட பல IP Rating-களைக் கொண்டுள்ளது
விளம்பரம்

ல்லாரும் ஆவலோட எதிர்பார்த்துட்டு இருந்த OnePlus 15 ஃபிளாக்ஷிப் போன் இப்போ இந்தியால லான்ச் ஆகிருச்சு.இந்த போன்ல Snapdragon 8 Elite Gen 5 சிப்செட், பெரிய பேட்டரினு நிறைய அப்டேட்ஸோட வந்திருக்கு. என்னென்னன்னு பார்க்கலாம் வாங்க. இந்த OnePlus 15 தான், இந்தியால Qualcomm-ன் லேட்டஸ்ட் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் உடன் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன். 4.608GHz வேகத்துல இயங்கக்கூடிய இந்த ப்ராசஸர், அதோட Tri-Chip Architecture (டச் ரெஸ்பான்ஸ் மற்றும் Wi-Fi-க்காக தனி சிப்கள்) மூலம் பெர்ஃபார்மன்ஸ்ல கொஞ்சமும் குறைய வைக்காது.

பேட்டரி மற்றும் சார்ஜிங்:

இந்த போன்ல ஒரு பிரம்மாண்டமான 7,300mAh Silicon-Carbon Battery இருக்கு! இது OnePlus இதுவரை கொடுத்ததுலயே பெரிய பேட்டரி. 120W SUPERVOOC Wired Charging மற்றும் 50W AIRVOOC Wireless Charging சப்போர்ட் இருக்கு. 39 நிமிஷத்துல ஃபுல் சார்ஜ் ஏறிடுமாம்! அதுமட்டுமில்லாம, 4 வருஷம் கழிச்சு கூட 80% பேட்டரி திறனை இது தக்க வைக்குமாம்.

டிஸ்பிளே:

இதுல 6.78-இன்ச் LTPO AMOLED Display இருக்கு. ரெசல்யூஷன் 1.5K தான் (1272x2772 pixels), ஆனா ரெஃப்ரெஷ் ரேட் 165Hz வரைக்கும் இருக்கு. அதுமட்டுமில்லாம, 1.15 mm மெல்லிய பெசல்கள் இருக்கு. இது டிஸ்பிளே-க்கு ஒரு பிரீமியம் லுக் கொடுக்குது.

கேமரா: பின்னாடி Triple 50MP Camera செட்டப் இருக்கு.

● 50MP Main Sensor (Sony IMX906, OIS உடன்)
● 50MP Ultra-wide கேமரா
● 50MP Periscope Telephoto லென்ஸ் (3.5x Optical Zoom, OIS உடன்) முன்னாடி, செல்ஃபிக்காக 32MP Sony IMX709 கேமரா இருக்கு. இது 8K @ 30fps மற்றும் 4K @ 120fps வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் பண்ணும். DetailMax Engine போன்ற AI டூல்களும் கேமராவை மேம்படுத்துகின்றன.

விலை மற்றும் சலுகைகள்:

● 12GB RAM + 256GB Storage: ₹72,999
● 16GB RAM + 512GB Storage: ₹79,999
● சலுகை: HDFC வங்கி கார்டு மூலம் ₹4,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதனால் ஆரம்ப விலை ₹68,999 ஆக குறையும். இலவச OnePlus Nord Buds 3, 180 நாட்கள் போன் மாற்றும் திட்டம், மற்றும் வாழ்நாள் டிஸ்பிளே வாரண்டி போன்ற சலுகைகளும் இருக்கு.
● கலர்கள்: Infinite Black, Sand Storm மற்றும் Ultra Violet போன்ற கலர்கள்ல கிடைக்குது.
மொத்தத்துல, OnePlus 15 ஒரு பவர்ஃபுல் சிப்செட், மாஸ்ஸான பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் ஒரு கம்ப்ளீட் ஃபிளாக்ஷிப் போனா வந்திருக்கு. இந்த விலை மற்றும் அம்சங்கள் உங்களுக்கு திருப்தி அளிக்குதா? இந்த OnePlus 15 போன்ல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச அம்சம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »