Photo Credit: OnePlus
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பதுOnePlus 13, OnePlus 13R செல்போன் பற்றி தான்.
OnePlus 13 அக்டோபரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்தியா உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளுக்கு வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. இது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் OnePlus 13R வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது OnePlus Ace 5 ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
வரவிருக்கும் OnePlus 13 சீரியஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் ஜனவரி 7, 2025 அன்று இரவு 9 மணிக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 13 இந்தியாவில் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா இணையதளம் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும் என்று நிறுவனம் முன்பு உறுதிப்படுத்தியது . இது ஆர்க்டிக் டான், பிளாக் எக்லிப்ஸ் மற்றும் மிட்நைட் ஓஷன் ஆகிய வண்ண விருப்பங்களில் வர உள்ளது.
OnePlus 13R ஆனது Snapdragon 8 Gen 3 சிப்செட் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய தலைமுறை OnePlus 12 மாடலை இயக்கும் அதே சிப்செட் தான் இதுவும். OnePlus 13R மாடல் குறைந்தது 12GB ரேம் கொண்டதாக இருக்கும். OnePlus 13 மாடலை போலவே, இது ஆண்ட்ராய்டு 15 உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் OxygenOS 15 மூலம் இயங்கும். இது அதே Android பதிப்பில் இயங்கும் மாடலாகவே இருக்கும். இது Astral Trail மற்றும் Nebula Noir ஷேடோகளில் கிடைக்கும்.
50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா, 8 மெகாபிக்சல் சென்சார்கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் சென்சார் கேமரா கொண்ட யூனிட் இருக்கும்.
ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய 2 மாடல்களுமே டிடிஆர்ஏ (TDRA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. இது 6.82-இன்ச் 2கே+ LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸரை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டிருக்கும். OnePlus 13R ஆனது OnePlus 12R செல்போனை விட சற்றே எடை குறைவாகவும் மெல்லியதாகவும் இருக்கும். இதில் இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் கைரேகை சென்சார் மற்றும் அகச்சிவப்பு பிளாஸ்டர் ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்