Photo Credit: OnePlus
OnePlus 13 செல்போன் அக்டோபரில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. Snapdragon 8 Gen 4 SoC சிப்செட் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 120Hz BOE X2 டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். பல அம்சங்களை கொண்டிருக்கும் செல்போன் இந்த மாத இறுதியில் நிச்சயம் வரும் என OnePlus 13 நிறுவனத்தின் நிர்வாகி புதன்கிழமை உறுதிப்படுத்தினார். இது முதலில் சீனாவில் அறிமுகமாகும். இந்த ஆண்டின் பிற்பகுதியில் உலகளாவிய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செயல்திறனில் OnePlus 13 ஒரு "பெரிய பாய்ச்சலை" கொண்டு வரும் என OnePlus நிர்வாகி கூறினார்.
OnePlus சீனாவின் தலைவர் லூயிஸ் லீ ஒரு வெய்போ பதிவில் OnePlus 13 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த ஸ்மார்ட்போன் முதலில் ColorOS 15 மூலம் இயங்கும் என கூறப்பட்டது. ஒன்பிளஸ் ஃபோன்கள் சீனாவிற்கு வெளியே சற்று மாற்றியமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் OS அல்லது Oppo செல்போனின் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான OS மூலம் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் OnePlus 13 ஸ்மார்ட்போன் செயல்திறனில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தலைக் கொண்டிருக்கும் என்பதையும் லீ உறுதி செய்துள்ளார். சமீபத்திய Snapdragon 8 Gen 4 SoC சிப் மூலம் OnePlus13 செல்போனின் செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த சரளத்தன்மை ஆகிய இரண்டிலும் "பெரிய பாய்ச்சலை" கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டில் இதுவரை கண்டிராத உயரத்தை எட்டியுள்ளது Onepuls நிர்வாகி கூறினார்.
இந்த செல்போனில் Snapdragon 8 Gen 4 SoC பின்புறத்தில் வரக்கூடும். இது இந்த மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சிப்செட் நிறுவனத்தின் பிரத்யேக நியூரல் செயலாக்க அலகு (NPU) கொண்டிருக்கும் என என எதிர்பார்க்கப்படுகிறது. இது செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான அமசங்களை கொண்டிருக்கும். வேகமான செயல்திறனை வழங்கும்.
OnePlus 13 செல்போனில் ColorOS 15 இந்தியாவில் வராது. ஆனால் இயக்க முறைமையில் புதிய டைடல் என்ஜின் மற்றும் அரோரா எஞ்சின் இடம்பெறும் என்று லீ எடுத்துரைத்தார். இது வேகமான செயல்திறன் மற்றும் மென்மையான அனிமேஷன் அம்சங்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.
முன்பு வெளியான அறிக்கைகளின் அடிப்படையில் , OnePlus 13 ஆனது 6.82-இன்ச் 2K 10-பிட் LTPO BOE X2 மைக்ரோ குவாட் வளைந்த OLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BOE டிஸ்பிளே ஓரியண்டல் திரையின் இரண்டாம் தலைமுறையாகும். இது OnePlus 12 செல்போனில் காணப்படும் BOE X1 டிஸ்ப்ளேவை விட சிறப்பாக செயல்படும் என்று கூறப்படுகிறது.
டிஸ்பிளே சர்க்யூட்ரிக்குள் பொருத்தப்பட்ட அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் என்று கூறுகிறது. இது கண் பாதுகாப்பு அம்சத்தை கொடுக்கும். விளிம்புகளில் மென்மையான பினிஷ் இருக்கும். இதில் சூப்பர் செராமிக் கிளாஸ் பேக் பேனல் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. பின் பக்கம் நான்கு வட்ட கேமராக்கள் கொண்ட யூனிட் வட்ட வடிவில் இருக்கும் என தெரிகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்