நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது OnePlus 13 செல்போன் பற்றி தான்.
டிசம்பர் 2023ல் சீனாவில் வெளியிடப்பட்ட OnePlus 12க்கு அடுத்தபடியாக OnePlus 13 அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக இந்த செல்போனின் சிப்செட், டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி மற்றும் சார்ஜிங் விவரங்கள் உள்ளிட்ட முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி வருகிறது. மேலும் ஒன்பிளஸ் 13-ன் பேட்டரி கெப்பாசிட்டி, பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் கேமரா சென்சார் குறித்த விவரங்கள் லீக்கானது. Weibo leak மூலம் வெளியான தகவல் படி, OnePlus 13 ஆனது 6,000mAh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய Gizmochina அறிக்கையில் இந்த தகவல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. OnePlus 13 ஸ்மார்ட்போன் 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது.
OnePlus 13 ஆனது f/1.6 துளையுடன் கூடிய 50-மெகாபிக்சல் Sony LYT-808 கேமரா சென்சார் பெறலாம். O916T ஹாப்டிக் மோட்டாருடன் வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த அம்சங்கள் தற்போதைய OnePlus 12 மாடலில் காணப்படுவதைப் போலவே உள்ளன.
முன்பு வெளியான தகவல்படி பார்த்தால் OnePlus 13 பின்புற கேமரா தொகுதியில் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 50 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் இருக்கலாம் என்று கூறப்பட்டது. வளைந்த விளிம்புகளுடன் 2K 120Hz பிளாட் டிஸ்ப்ளேவைப் பெறலாம். இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 4 சிப்செட் மூலம் இயக்கப்படும். ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP69-மதிப்பிடப்பட்ட கட்டமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக, இது அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனரைப் பெறலாம் என கூறப்படுகிறது.
OnePlus 13 இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வட்ட வடிவ கேமரா மாட்யூல் இடம்பெறாமல் இருக்கலாம். ஆனால் OnePlus 12 போன்ற அதே லென்ஸ் டிசைனை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய மாடலின் விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்தின் போது, OnePlus 12 ஸ்மாட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கு அறிமுகமானது. இதே போலவே ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூபாய் 60 ஆயிரத்துக்கும் மேல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை வழக்கமான லான்ச் டைம்லைன் உடன் ஒப்பிடும் போது ஒன்பிளஸ் 13 ஆனது 2 மாதங்களுக்கு முன்பாகவே அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்