Photo Credit: OnePlus 13
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது OnePlus 13 செல்போன் பற்றி தான்.
ஒன்பிளஸ் 13 அக்டோபரில் சீனாவில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் SoC மற்றும் ஹாசல்பிளாட் ஆதரவு கொண்ட 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டுடன் வெளியிடப்பட்டது. ஜனவரியில் இந்தியா உட்பட சீனாவிற்கு வெளியே உள்ள உலகளாவிய சந்தைகளில் இந்த கைபேசி அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது . சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஸ்மார்ட்போனின் இந்திய மற்றும் உலகளாவிய தயாரிப்புக்கள் சீன செல்போன் மாடலை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக, OnePlus 13 பற்றிய விவரங்கள் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
OnePlus 13 இந்தியாவில் Amazon வழியாக OnePlus India வலைத்தளத்துடன் வாங்குவதற்கு கிடைக்கும் என்று e-commerce தளத்தின் நேரடி மைக்ரோசைட் உறுதிப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு 15-அடிப்படையிலான OxygenOS 15 உடன் வரும் என்பதை மைக்ரோசைட் வெளிப்படுத்துகிறது. கைபேசியில் AI-ஆதரவு இமேஜிங் மற்றும் குறிப்பு-எடுக்கும் அம்சங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும். இந்திய வேரியன்ட் சீன மாடலை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
OnePlus 13 ஆனது Snapdragon 8 Gen 3 சிப்செட் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய தலைமுறை OnePlus 12 மாடலை இயக்கும் அதே சிப்செட் தான் இதுவும். OnePlus 13 மாடல் குறைந்தது 12GB ரேம் கொண்டதாக இருக்கும். இது ஆண்ட்ராய்டு 15 உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் OxygenOS 15 மூலம் இயங்கும். இது அதே Android பதிப்பில் இயங்கும் மாடலாகவே இருக்கும். இது Astral Trail மற்றும் Nebula Noir ஷேடோகளில் கிடைக்கும்.
OnePlus 13 சிங்கிள்-கோர் டெஸ்டில் 2,238 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்டில் 6,761 புள்ளிகளையும் பெற்றது. Geekbench தளத்தில் வெளியான தகவல் படி OnePlus 12 மாடல் உடன் ஒப்பிடுகையில் இந்த முடிவுகள் சற்று அதிகமாக உள்ளன. 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா, 8 மெகாபிக்சல் சென்சார்கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் சென்சார் கேமரா கொண்ட யூனிட் இருக்கும்.
ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய 2 மாடல்களுமே TDRA என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. இது 6.82-இன்ச் 2கே+ LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸரை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டிருக்கும்.
OnePlus 13 ஆனது OnePlus 12 செல்போனை விட சற்றே எடை குறைவாகவும் மெல்லியதாகவும் இருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்