நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் கேமிங் போன்!

ZTE-யின் துணை நிறுவனம் ரெட் மேஜிக்கின் வெற்றியைத் தொடர்ந்து அதன் அடுத்த தயாரிப்பினை வெளியிட்டுள்ளது

நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் கேமிங் போன்!

சீனாவில் நுபியா ரெட் மேஜிக் டிசம்.7 முதல் விற்பனைக்கு வருகிறது.

ஹைலைட்ஸ்
  • நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் சீனாவில் வெளியாகியது.
  • தற்போது சீனாவில் நுபியா ரெட் மேஜிக் முன்பதிவு செய்யப்படுகிறது.
  • போனின் விலை மற்றும் முக்கியம்சங்கள் குறித்த தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்
விளம்பரம்

கேமிங் ஸ்மார்ட்போனான ரெட் மேஜிக் மார்ஸினை நுபியா அறிமுகப்படுத்தியுள்ளது. ZTE-யின் துணை நிறுவனம் ரெட் மேஜிக்கின் வெற்றியைத் தொடர்ந்து அதன் அடுத்த தயாரிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபலமான வீடியோ கேமான காட் ஆஃப் வாரினை தொடர்ந்து இந்த போனிற்கு பெயரிடப்பட்டுள்ளது. குவால்கம் ஸ்நாப்டிராகன் 845 ப்ரசாஸர்ருடன் 10ஜிபி ரேமில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் நீர் மற்றும் காற்றின் மூலம் குளிர்விக்கப்படும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

நுபியா ரெட் மேஜிக் மார்ஸின் விலை

சீனாவில் நுபியா ரெட் மேஜிக் 6ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் ஆரம்ப விலை CNY 2,699(ரூ.27,400). 8ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை CNY 3,199(ரூ.32,500). இதில் டாப் எண்ட் மாடலான 10ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் CNY 3.999 (ரூ.40,600) ஆகும். நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் கருப்பு, சிகப்பு நிறங்களில் கிடைக்கிறது.

நுபியா ரெட் மேஜிக் மார்ஸின் முக்கியம்சங்கள்

ஒற்றை சிம் கார்டு மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் ஆண்ட்ராய்டு 9.0 பை உள்ளது. 6 இன்ச் ஹெச்டி மற்றும் 18:9 என்ற வீதத்திலான திரையினைக் கொண்டுள்ளது. குவால்கம் ஸ்நாப்டிராகன் 845 ப்ராசஸரைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி/10ஜிபி ரேம்களில் கிடைக்கிறது.

இதன் முன்பக்க கேமரா 8 மெகா பிக்சல் ஆகும். பின்பக்க கேமரா 16 மெகா பிக்சலாகும். இதன் எடை 193 கிராமாகும். 3,800mAh பேட்டரியினைக் கொண்டுள்ளது.
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »