சமீபத்திய கேமிங் போனான Nubia Play சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த போன், 144Hz AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. போனின் விலை மற்றும் விவரங்களுக்கு இங்கே படிக்கவும்.
போனின் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை சீனாவில் சிஎன்ஒய் 2,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.26,000)-யாகவும்,
அதன் 8 ஜிபி + 128 ஜிபி பதிப்பு சிஎன்ஒய் 2,699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,000)-யாகவும்,
போனின் டாப்-எண்ட் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் சிஎன்ஒய் 2,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,500)-யாகவும் உள்ளது.
புதிய நுபியா போன் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இது ஏப்ரல் 24 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும்.
நுபியா ப்ளே ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765G SoC-யால் இயக்கப்படுகிறது
இந்த போன், டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது, நுபியா யுஐ 8.0 உடன் Android 10-ல் இயக்குகிறது. இந்த போன், 144Hz புதுப்பிப்பு வீகிதம் மற்றும் 240Hz டச் மாதிரி விகிதத்துடன் 6.4 அங்குல முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) டிஸ்பிளே உள்ளது. இது 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 765G SoC-யால் இயக்கப்படுகிறது. குறிப்பாக, போனின் வெப்பத்தை குறைக்க ICE 2.5 ரேக்-ஏற்றப்பட்ட திரவ குளிரூட்டும் முறை உள்ளது.
Nubia பிளேயின் குவாட் ரியர் கேமரா அமைப்பில், சோனி ஐஎம்எக்ஸ் 582 சென்சார் உடன் 48 மெகாபிக்சல் பிரதான ஸ்னாப்பர் உள்ளது. இது 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக, 12 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
நுபியா ப்ளே, 256 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இது 30W PD ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,100mAh பேட்டரி உள்ளது. இந்த போனில் அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்