தாய்வானில் வெளியான நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
தாய்வானில் வெளியான நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்!
ஹைலைட்ஸ்
 • ஹோல்-பஞ்ச் செல்ஃபி கேமராவுடன் இந்த நோக்கியா தயாரிப்பு வெளியாகிறது.
 • இந்த போனில் மூன்று பின்புற கேமரா மற்றும் 3,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.
 • தாய்வினில் இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 30 முதல் விற்பனைக்கு வெளியாகிறது.

நோக்கியா 9 ப்யூர் வியூ ஸ்மார்ட்போனுடன் நேற்று நோக்கியா X71 ஸ்மார்ட்போனையும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தாய்வானில் அறிமுகம் செய்தது. ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் சார்பில் வெளியாகும் முதல் ஹோல்-பஞ்ச் செல்ஃபி கேமரா இதுவாகவே இருக்கும். 48 மெகா-பிக்சல் பின்புற கேமரா, பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார், ஸ்னாப்டிராகன் 660 SoC மற்றும் 3,500mAh பேட்டரி வசதி போன்ற பல முன்னணி அமைப்புகளுடன் இந்த தயாரிப்பு வெளியாவது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா X71 விலை மற்றும் வெளியாகும் தேதி:

தாய்வானில் அறிமுகமாகியுள்ள இந்த நோக்கியா X71 ஸ்மார்ட்போன், ரூ.26,600 மதிப்புடையது. எக்லிப்ஸ் பிளாக் நிறத்தில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 30 முதல் விற்பனைக்கு வரும். நோக்கியாவின் இந்த புதிய தயாரிப்பு, உலக சந்தைகளில் வெளியாகும் தேதி பற்றிய தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.

நோக்கியா X71 அமைப்புகள்:

இந்த நோக்கியா X71 ஸ்மார்ட்போன் இரண்டு சிம்-கார்டு வசதியுடன் ஆண்ட்ராய்டு மென்பொருளால் இயங்குகிறது. 6.39 இஞ்ச் ஹெச்டி திரை, ஸ்னாப்டிராகன் 660 SoC கொண்டு இயங்கும் இந்த தயாரிப்பு 6ஜிபி ரேமுடன் வெளியாகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 128ஜிபி இன்-பில்ட் சேமிப்பு வசதியை கொண்டுள்ளது கூடுதல் தகவல். 

நோக்கியாவின் இந்த புதிய தயாரிப்பு 2.5D டபுள்-சைட் கிளாஸ் வசதியை கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் மூன்று பின்புற கேமராக்கள் இடம் பெற்றுள்ளன. போனின் முன்புற விளிம்பில் செல்ஃபி கேமரா அமைந்துள்ளது. இந்த போனில் வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் வலது புறித்தில் அமைந்துள்ளன.

பின்புறத்தில் உள்ள கேமரா வசதியைப் பொறுத்தவரை 48/5/8 மெகா பிக்சல் சென்சார்கள் இடம் பெற்றுள்ளன. அதுபோல் இந்த தயாரிப்பில் 16 மெகா பிக்சல் முன்புற செல்ஃபி கேமராவும் இடம் பெற்றுள்ளது. இந்த நோக்கியா X71 ஸ்மார்ட்போன் 3,500mAh பேட்டரி மற்றும் 18W வேகமாக சார்ஜ் செய்யும் வசதியை கொண்டுள்ளது. மேலும் 180 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போன் டைப்-சி வகை சார்ஜிங் ஸ்லாட்டை கொண்டுள்ளது.

Display 6.39-inch
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android Pie
கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. Mi TV Stick அறிமுகம்..! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ.!!
 2. வாட்ஸ்அப்பில் பிரவுசிங் அறிமுகம்! இனி Fake News-களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!!
 3. Redmi 9 Prime அறிமுகம்! பட்ஜெட் விலையில் சூப்பர் ஸ்மார்ட்போன்!!
 4. நான்கு கேமராக்களுடன் Realme V5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!
 5. வரும் 6 ஆம் தேதி Flipkart Big Saving Days Sale ஆரம்பம்! சலுகை விவரங்கள் இதோ!!
 6. Amazon Prime Day Sale: ஸ்மார்ட்போன்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு எக்கச்சக்க ஆஃபர்கள்!
 7. Google Pixel 4a ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 8. ரியில்மயின் 10W வயர்லெஸ் சார்ஜர் விற்பனை தொடக்கம்... விலை ரூ.899 மட்டுமே!
 9. ஜிபிஎஸ், ஹார்ட்-ரேட் சென்சாருடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை வெறும் ரூ.3,999தான்!
 10. ரியல்மி பட்ஸ் 3 இம்மாதம் அறிமுகம்... கூடவே ரியல்மி லேப்டாப் அறிமுகமா?
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com