கூகுள் நிறுவனம் தனது 'கால் ஸ்க்ரீன்' வசதியை கூகுளின் தயாரிப்புகளுக்கு மட்டுமே வழங்கி வந்த நிலையில் தற்போது இந்த அமைப்பை நோக்கியா மற்றும் மோட்டோரோலா போன்களுக்கும் தர முடிவெடுத்துள்ளது.
இந்த கால் ஸ்க்ரீன் அமைப்பின் மூலம் கூகுள் அசிஸ்டன்டின் உதவியுடன் வேண்டாத கால்கள் வருவதை தடுக்க முடிகிறது. இந்த சேவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் இந்த அமைப்பு நோக்கியா, மோட்டோரோலா தயாரிப்புகளின்றி மற்ற ஸ்மார்ட்போன்களுக்கும் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்த அமைப்பு ஆங்கிலத்தில் மட்டுமே இயங்குகின்ற நிலையில், பிக்சல் 2, 2 XL, 3, or 3 XL போன்ற போன்களில் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது.
இந்த அமைப்பு நாம் பயன்படுத்தும் போது கூகுள் அசிஸ்டன்ட், போன் செய்பவரின் தகவலை அளிக்கிறது. இந்த தகவலை வைத்துக் கொண்டு வாடிக்கையாளர் அந்த போனை எடுக்க வேண்டுமா அல்லது வேண்டமா என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்