Triple rear கேமரா அமைப்பைக் கொண்ட 3,500mAh பேட்டரியுடன் வருகிறது Nokia 6.2
Snapdragon 636 SoC-யால் இயக்கப்படுகிறது Nokia 6.2
Nokia 6.2 மற்றும் Nokia 7.2 ஆகியவை கடந்த மாதம் HMD Global நிறுவனத்தால், IFA வர்த்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டன. இந்த இடைப்பட்ட Nokia ஸ்மார்ட்போன், அமேசானின் வரவிருக்கும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: கொண்டாட்டம் சிறப்பு விற்பனைக்கு முன்னதாக (இன்று) அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
இந்தியாவில் Nokia 6.2-வின் விலை
IFA 2019-ல், Nokia 6.2-வின் 3 ஜிபி + 32 ஜிபி மாடலின் விலை EUR 199 (தோராயமாக ரூ .15,800)-யாக ஐரோப்பாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 6.2 இன் இந்தியா விலை ஐரோப்பாவின் விலைக்கு இணையாக இருக்க வேண்டும் என்றும், சற்று குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். Ceramic Black மற்றும் Ceramic Ice colour ஆகிய இரண்டு வண்ணங்களிலும் Nokia 6.2 கிடைக்கும்.
Nokia 6.2 விவரக்குறிப்புகள்
இரட்டை சிம் (நானோ) Nokia 6.2 Android 9 Pie-யில் இயங்குகிறது. HDR 10 ஆதரவு, Gorilla Glass 3 மற்றும் 500 nits peak brightness உடன் 6.3-inch full-HD+ display-வைக் கொண்டுள்ளது. இது octa-core Qualcomm Snapdragon 636 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி வரை ரேம் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தொலைபேசி 3,500mAh பேட்டரியை பேக் செய்கிறது.
இமேஜிங் முன்புறத்தில், ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இது f/1.8 aperture உடன் 16-megapixel primary shooter-ரும், f/2.2 aperture உடன் 5-megapixel depth sensor மற்றும் 8-megapixel wide-angle shooter ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போர்டில் 8-megapixel f/2.0 selfie கேமராவும் உள்ளது.
Nokia 6.2, 128 ஜிபி வரை இண்டர்னல் ஸ்டோரேஜை பிரத்யேக microSD card slot உடன் (512 ஜிபி வரை) தொகுக்கிறது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C port, GPS மற்றும் 4G LTE ஆகியவை அடங்கும். தொலைபேசி 159.88x75.11x8.25mm அளவீடு மற்றும் 180 கிராம் எடையைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India