Nokia 6.2 மற்றும் Nokia 7.2 ஆகியவை இந்தியாவில் விலை வீழ்ச்சியடைந்துள்ளன என்று எச்எம்டி குளோபல் கேஜெட்ஸ் 360-க்கு உறுதிப்படுத்தியது. விலைக் குறைப்பின் விளைவாக, நோக்கியா போன்கள் ரூ. 3,500 வரை விலைக் குறைப்புடன் கிடைக்கின்றன.
சமீபத்திய திருத்தம் Nokia 6.2-வின் விலை ரூ. 12.499-யாக குறைக்கப்பட்டுள்ளது. இது, அசல் வெளியீட்டு விலையான ரூ. 15,999-ல் இருந்து ரூ. 3,500 குறைப்பாகும். HMD Global கேஜெட்ஸ் 360-க்கு சமீபத்திய விலை வீழ்ச்சியை உறுதிப்படுத்தியது. மேலும், திருத்தப்பட்ட விலை Amazon மற்றும் Nokia India online store இரண்டிலும் பிரதிபலிக்கிறது.
Nokia 6.2 தவிர, Nokia 7.2-வும் இந்தியாவில் விலைக் குறைப்பை பெற்றுள்ளது. இதன் 4GB + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் Rs. 18,599-ல் இருந்து ரூ. 15,499-யாக குறைக்கப்பட்டுள்ளது. இது, ரூ. 3,100 விலைக் குறைப்பாகும். இதேபோல், 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 2,500 விலைக்குறைப்புடன் ரூ. 17,099-க்கு கிடைக்கிறது. Flipkart மற்றும் Nokia India online store சமீபத்திய விலைக் குறைப்பைக் காட்டுகின்றன. மேலும், கேஜெட்ஸ் 360-க்கு திருத்தப்பட்ட விலையை எச்எம்டி குளோபல் உறுதிப்படுத்தியுள்ளது.
டூயல்-சிம் (நானோ) Nokia 6.2, Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 6.3-inch full-HD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 636 SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த போன், f/1.8 lens உடன் 16-megapixel முதன்மை சென்சார், 5-megapixel depth சென்சார் மற்றும் f/2.2 aperture உடன் 8-megapixel wide-angle ஷூட்டரை டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் கொண்டுள்ளது. தவிர, இந்த போன் f/2.0 lens உடன் 8-megapixel செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.
Nokia 6.2-வில் 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜை HMD Global வழங்குகிறது. இதனை microSD card வழியாக (512GB வரை) பிரத்யேக ஸ்லாட் மூலம் விரிவாக்கம் செய்யலாம். இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C port, GPS மற்றும் 4G LTE. தவிர, இந்த போன் 3,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
டூயல்-சிம் (நானோ) Nokia 7.2, Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 6.3-inch full-HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 6GB RAM உடன் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 660 SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த போன், 48-megapixel முதன்மை சென்சார், 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 5-megapixel மூன்றாம் நிலை சென்சாரை டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் கொண்டுள்ளது. மேலும், 20-megapixel செல்ஃபி கேமரா சென்சாரைக் கொண்டுள்ளது.
Nokia 7.2, 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம். இந்த போன் 3,500mAh பேட்டரையைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்