HDM குளோபல் நிறுவனம் தனது இந்திய வலைத்தளத்தின் வழியாக குறைக்கப்பட்ட விலைகளில் நோக்கியா 6.1 போனை விற்பனை செய்கிறது.
ஆகஸ்ட் 21 அன்று இந்தியாவில் நோக்கியா 6.1 Plus போன் அறிமுகமாக உள்ளதை அடுத்து அதன் முந்தைய வடிவங்களான நோக்கியா 6.1, நோக்கியா 6 ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்விரண்டு போன்களின் விலையும் 1500 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. நோக்கியா X6 என்ற பெயரில் சீனாவில் மே மாதம் அறிமுகமான போன்தான் நோக்கியா 6.1 பிளஸ் என்ற பெயரில் தற்போது உலகின் மற்ற பகுதிகளில் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நோக்கியா 6.1, நோக்கியா 6 முதலில் 3ஜிபி ரேம்/ 32ஜிபி ஸ்டோரேஜுடன் வெளியானது. இதன் விலை 16,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் 18,999க்கு இதன் 4ஜிபி ரேம்/64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் வெளியானது. தற்போது விலைக்குறைப்புக்குப் பிறகு இவை முறையே 15,499 ரூபாய்க்கும் 17,499 ரூபாய்க்கும் கிடைக்கும். இந்தப் புதிய விலைகள் நோக்கியாவின் இந்திய வலைத்தளத்திலும் காணக்கிடைக்கிறது.
Nokia 6.1 Plus ( #NokiaX6 ) திறன்குறிப்பீட்டு விவரங்கள்:
நோக்கியா 6.1 பிளஸ்சின் திறன்குறிப்பீடுகள் சீனாவில் முன்பு வெளியான நோக்கியா X6 இன் திறன்களேதான். இரட்டை நானோ சிம், ஆண்டிராய்ட் 8.1 ஓரியோ, 2.5டி கொரில்லா கிளாஸ் 3 கொண்ட 5.8” முழு எச்டி டிஸ்பிளே, 19:9 உயர அகல விகிதம் என்ற வடிவமைப்பில் இப்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 SoC, 4ஜி ரேம், இரட்டை பின்புற கேமரா (16mp, 5mp, f/2.0), முன்புற செல்பி கேமரா (16 mp, f.2.0) ஆகிய அம்சங்களும் அடங்கியுள்ளன. படம் எடுப்பதில் பல செயற்கை நுண்ணறி திறன்கள் கொண்டுள்ளது. ஃபேஸ் அன்லாக் வசதியும் உள்ளது.
மெமரியைப் பொருத்தவரை, 64 ஜிபி இன்டர்னல் மெமரி உள்ளது. வேண்டுமானால் இதை மெமரி கார்டு மூலம் 400 ஜிபி வரை நீட்டித்துக்கொள்ள முடியும் என்பது இதன் சிறப்பம்சம். 4ஜி VoLTE, Wifi 802.11ac, ப்ளுடூத் v5.0, GPS/A-GPS. 3.5மிமீ ஆடியோ ஜாக், டைப் – சி யூஎஸ்பி ஆகிய கனக்டிவிட்டி ஆப்சன்கள் உள்ளன. பேட்டரி கொள்திறன் 3060mAh ஆகும். அளவு: 147.2x70.98x7.99மிமீ.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்