சீனாவில் வெளியான நோக்கியா எக்ஸ் 6 மாடல், சர்வதேச சந்தையில் நோக்கியா 6.1 ப்ளஸ் என்ற பெயரில் வெளியாக உள்ளது. முதலில் ஹாங்காங்கில் வெளியாக உள்ள இந்த ஸ்மார்ட் ஃபோன், கூகுளின் ஆண்டுராய்டு ஒன் தொழில்நுட்பத்தில் இயங்க கூடியது.
நோக்கியா 6.1 ப்ளஸ் விலை, விற்பனை
ஹாங்காங் நாட்டில் தயாராகியுள்ள நோக்கியா 6.1 ப்ளஸ் ஸ்மார்ட் ஃபோன், 2288 ஹாங்காங் டாலர் (20,000 ரூபாய்) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீலம், வெள்ளை நிறங்களில் வெளியாக உள்ள இந்த ஸ்மார்ட் போன், வரும் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஹாங்காங்கில் விற்பனைக்கு வர உள்ளது. எனினும், மற்ற நாடுகளில் விற்பனை தொடங்குவது குறித்து தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்தியாவில் நோக்கியா ஃபோன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், விரைவில் இங்கும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நோக்கியா 6.1 ப்ளஸ் குறிப்புகள்
டூயல் நானோ சிம், ஆண்டுராய்டு 8.1 ஓரியோ தொழிநுட்பத்தில் இயங்குகிறது. 5.8 இன்ச் முழு எச்.டி டிஸ்ப்ளே (1080x2280 பிக்ஸல்ஸ்), 2.5டி கொரில்லா க்ளாஸ் 3 பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 636 Soc மற்றும் 4 ஜிபி RAM ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
நோக்கியா 6.1 ப்ளஸ் கேமராவை பொறுத்த வரையில், டூயல் ரியர் கேமரா, 16 மெகாபிக்ஸல் ப்ரைமரி சென்சார், 5 மெகாபிக்சல் செகண்டரி சென்சார், f/2.0 அப்ரேச்சர், 1 மைக்ரோன் பிக்ஸல் சென்சார் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. குறிப்பாக, அல் கேமரா வசதிகளை பதிவேற்றம் செய்யவும் நோக்கியா 6.1 ப்ளஸ் தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். மேலும், ரியர் கேமரா, ஃப்ரண்ட் கேமராவை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போதி வசதியை இந்த ஸ்மார்ட் போன் கொண்டுள்ளது. ஃபேஸ் அன்லாக், 64 ஜிபி இன்-பில்ட் ஸ்டோரேஜ் என வாடிக்கையாளர்களை கவர்கிறது இந்த நோக்கியா 6.1 ப்ளஸ்.
நோக்கியா 6.1 ப்ளஸ் போன் கனெக்டிவிட்டியில், 4ஜி VoLTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத் v5.0, GPS/A-GPS, 3.5 mm ஹெட்போன் ஜாக், USB டைப் சி போர்ட் ஆகிய வசதிகள் உள்ளன. ஆக்செலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், டிஜிட்டல் காம்பஸ், ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகிய சென்சார்கள் இடம் பெற்றுள்ளன. ரியர் பேனலில், ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார், 30 நிமிடங்களில் 50% சார்ஜ் ஏறும் 3060mAh பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சம். இதன் எடை 151 கிராம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்