இந்தியாவில் Nokia 2.2-வின் விலை ரூ. 5,999-யாக விலைக் குறைந்துள்ளது என HMD Global துணைத் தலைவர் இந்தியா மற்றும் APAC Ajey Mehta ஒரு ட்வீட் மூலம் அறிவித்துள்ளனர். நாட்டில் Nokia 2.2 மற்றும் Nokia 3.2 ஆகியவற்றின் விலையை HMD Global குறைத்து, ஒரு மாதத்திற்குப் பிறகு புதிய விலை குறைப்பு வருகிறது. கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் பிராண்டிங்குடன் பட்ஜெட் நோக்கியா போன் ஜூன் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட்போன் MediaTek Helio A22 SoC-ஐக் கொண்டுள்ளது. அதோடு, Digital Wellbeing மற்றும் Face Unlock போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. Realme C2, Asus ZenFone Max M1 மற்றும் Redmi 8 போன்றவற்றுக்கு எதிராக Nokia 2.2 போட்டியிடுகிறது.
இந்தியாவில் Nokia 2.2-வின் விலை:
இந்தியாவில் Nokia 2.2-வின் 2 ஜிபி ரேம் வேரியண்டின் விலை 5,999 ரூபாயும், அதன் 3 ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ. 6,999-யாகவும் விலைக் குறியீட்டுடன் கிடைக்கிறது. இந்த விலைக் குறைப்பை HMD Global-ன் மேத்தா (Mehta) அறிவித்துள்ளார், இது ஏற்கனவே நோக்கியா இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் பிரதிபலிக்கிறது. Nokia 2.2, Steel மற்றும் Tungsten Black வண்ண விருப்பங்களை திருத்தப்பட்ட விலைகளுடன், பட்டியலிட்ட பிளிப்கார்ட்டுக்கும் இது பொருந்தும்.
நினைவுகூர, இந்தியாவில் Nokia 2.2-வின் 2 ஜிபி ரேம் + 16 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு 7,699 ரூபாயும், அதன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ. 8.699-யாகவும் உள்ளது. ஸ்மார்ட்போன் கடந்த மாதம் ஒரு விலைக் குறைப்பைப் பெற்றது. அப்போது Nokia 2.2-வின் விலை ரூ. 6.599 ஆகும்.
Nokia 2.2-வின் விவரக்குறிப்புகள்:
இரட்டை சிம் (நானோ) Nokia 2.2, Android 9 Pie-யால் இயங்குகிறது. இது 19:9 aspect ratio மற்றும் waterdrop-style notch உடன் 5.71-inch HD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 3GB RAM உடன் இணைக்கப்பட்டு quad-core MediaTek Helio A22 SoC உள்ளது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Nokia 2.2-வின் பின்புறத்தில் f/2.2 lens மற்றும் LED flash உடன் 13-megapixel கேமரா சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5-megapixel செல்ஃபி கேமராவையும் முன்பக்கத்தில் கொண்டுள்ளது.
Nokia 2.2-வில் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இது, microSD card வழியாக (400GB வரை) விரிவாக்கக்கூடியது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS மற்றும் Micro-USB port ஆகியவை அடங்கும். தவிர, இந்த ஸ்மார்ட்போன் 3,000mAh பேட்டரியை பேக் செய்வதோடு, 145.96x70.56x9.3mm அளவீட்டையும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்