Motorola Razr 50s வெயிட் பண்ணும் போதே வெறி ஆகுதே

Motorola Razr 50s ஆனது Lenovo நிறுவனத்தின் அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக இருக்க போகிறது

Motorola Razr 50s வெயிட் பண்ணும் போதே வெறி ஆகுதே

Photo Credit: Motorola

Motorola Razr 50s may join the Razr 50 and Razr 50 Ultra in the company's lineup

ஹைலைட்ஸ்
  • Motorola Razr 50s 8GB RAM மற்றும் octa-core SoC கொண்டுள்ளது
  • ஆண்ட்ராய்டு 14 மூலம் இயக்கப்படும்
  • சிப்பில் எட்டு கோர்கள் இருப்பதாக கூறப்படுகிறது
விளம்பரம்

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Motorola Razr 50s செல்போன் பற்றி தான்.


Motorola Razr 50s ஆனது Lenovo நிறுவனத்தின் அடுத்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக இருக்க போகிறது. 8 GB RAM மற்றும் octa-core SoC கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 மூலம் இயக்கப்படுகிறது. Motorola Razr 50s சமீபத்தில் HDR10+ சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டது. 91 Mobiles அறிக்கையின்படி , Motorola Razr 50s ஆனது Geekbench 6 கிராஸ்-பிளாட்ஃபார்ம் பெஞ்ச்மார்க் தளத்தில் காணப்பட்டது.


இது ARMv8 கட்டமைப்புடன் aito என அழைக்கப்படும் மதர்போர்டுடன் பட்டியலிடப்பட்டது. எட்டு கோர்கள் கொண்ட சிப் இருப்பதாக கூறப்படுகிறது; நான்கு செயல்திறன் கோர்கள் 2.50GHz மற்றும் நான்கு செயல்திறன் கோர்கள் 2.0GHz வேகத்தில் இயங்கும். சிப்செட் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், இது MediaTek Dimensity 7300X SoC மூலம் இயங்கும் என ஊகிக்கப்படுகிறது.


Motorola Razr 50s ஆண்ட்ராய்டு 14, 7.28 ஜிபி ரேம் உடன் வருகிறது. பட்டியலின்படி, Geekbench சிங்கிள்-கோர் மற்றும் மல்டி-கோர் சோதனைகளில் முறையே 1,040 மற்றும் 3,003 புள்ளிகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. Gadgets 360 மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 1,926 மற்றும் 4,950 புள்ளிகளைப் பெற்றது.
Gadgets 360 பணியாளர்களால் Geekbench 6.3.0 மதிப்பெண்களை சரிபார்க்க முடியவில்லை என்றாலும், Motorola Razr 50s செல்போனின் Geekbench AI மதிப்பெண்களைப் பெற முடிந்தது. இந்த பட்டியலில், மோட்டோரோலா ரேஸ்ர் 50s துல்லியமான சோதனையில் 889 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இதற்கிடையில், அரை துல்லியம் மற்றும் அளவிடப்பட்ட மதிப்பெண்கள் முறையே 887 மற்றும் 1,895 புள்ளிகளாக இருந்தன. அறிமுகப்படுத்தப்படும் போது, Motorola Razr 50 மற்றும் Razr 50 Ultra ஆகிய மாடல்கள் நிறுவனத்தின் கிளாம்ஷெல்-பாணியில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் வரிசையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Motorola Razr 50s செல்போன் 165Hz LTPO பேனல், ஃபோல்டபில் ஸ்கிரீன், பாஸ்ட்டெஸ்ட் சார்ஜ், IPX8 நீர்-எதிர்ப்பு மதிப்பீடு, டெலிஃபோட்டோ கேமரா மற்றும் பல அம்சங்களுடன் வருகிறது. கவர் டிஸ்ப்ளேவில் HDR10+ ஆதரவுடன் 4-இன்ச் LTPO POLED பேனலும், போனை விரிக்கும்போது, 6.9-இன்ச் FHD+ poOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 4,000mAh பேட்டரி திறனை கொண்டுள்ளது. இந்த போன் நிறுவனத்தின் முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும்போது மெல்லிய பெசல்களுடன் பெரிய கவர் டிஸ்பிளே உடன் வருகிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S26: Camera Upgrades மற்றும் Snapdragon 8 Elite Gen 5 உடன் முழு விவரங்கள் லீக்
  2. வெறும் ₹1,299-க்கா ANC நெக்பேண்டா? Lava-வோட இந்த புதிய ஆடியோ ப்ராடக்ட் எப்படி இருக்குன்னு பாருங்க!
  3. மொபைல் கெய்மிங்க்கு இதான் Next Level! OnePlus 15 பத்தி தெரிஞ்சுக்கணுமா? மிஸ் பண்ணாதீங்க
  4. இந்திய கம்பெனில இருந்து மிரட்டலான போன்! Lava Agni 4 டீஸர் பத்தி முழு விவரம்!
  5. ரியல்மி-யின் புதிய ராக்கெட்! Realme GT 8 Pro நவம்பர்-ல் Flipkart-ல் தரையிறங்குகிறது!
  6. 7,500mAh சார்ஜரே இல்லாத பேட்டரியா? புதிய iQOO Neo 11 மாடல் சும்மா தெறிக்குது!
  7. 200MP Zeiss கேமராவுடன் Vivo X300 Pro அறிமுகம்! கேமரா பிரியர்களுக்கு ஒரு பொக்கிஷம்
  8. iQOO-வின் அடுத்த ராக்கெட்! iQOO 15, 10,000+ Multi-Core ஸ்கோருடன் Geekbench-ல் மிரட்டல்
  9. ஒன்ப்ளஸ், iQOO-வுக்கு போட்டியாக Realme! GT 8 Pro நவம்பர் 20-ல் இந்தியாவில் அறிமுகம்?
  10. Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »