HD+ Max Vision டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Moto G8 Play, Moto E6 Play!

HD+ Max Vision டிஸ்பிளேவுடன் அறிமுகமானது Moto G8 Play, Moto E6 Play!

triple rear கேமரா அமைப்புடன் வருகிறது Moto G8 Play

ஹைலைட்ஸ்
  • 6.2-inch Max Vision HD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது Moto G8 Play
  • single rear கேமராவுடன் வருகிறது Moto E6 Play
  • Moto G8 Plus மற்றும் Motorola One Macro உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது
விளம்பரம்

Moto G8 Play மற்றும் Moto E6 Play-வை அறிமுகப்படுத்தி Motorola தனது குடும்பத்தை விரிவுபடுத்தியுள்ளது.


Moto G8 Play மற்றும் Moto E6 Play-வின் விலை: 

Moto G8 Play-வின் 2GB RAM + 32GB ஸ்டோரேஜின் விலை BRL 1,099 (சுமார் ரூ. 19,300) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரேசில், மெக்ஸிகோ, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகளில்மட்டுமே Black Onyx மற்றும் Magenta Red நிறங்களில் தற்போது கிடைக்கிறது. இது வரும் மாதங்களில் லத்தீன் அமெரிக்காவின் பிற நாடுகளை எட்டும். இருப்பினும், இந்தியா உள்ளிட்ட உலகளாவிய சந்தைகளில் அதன் அறிமுகம் குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கு மாறாக, Moto E6 Play-வின் 2GB RAM + 32GB ஸ்டோரேஜின் விலை EUR 108 (சுமார் ரூ .8,500) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன், தற்போது பிரேசில் மற்றும் மெக்சிகோவில் Ocean Blue மற்றும் Steel Black நிறங்களில் கிடைக்கிறது. Motorola நவம்பர் பிற்பகுதியில் தொடங்கி தொலைபேசியை ஐரோப்பாவிற்கு கொண்டு வருவதற்கான திட்டங்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்காவின் பிற நாடுகளிலும் ஆசியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளிலும் அதன் வெளியீடு வரும் மாதங்களில் நடைபெறும்.

Moto G8 Play மற்றும் Moto E6 Play தவிர, Moto G8 Plus மற்றும் Motorola One Macro-வின் உலகளாவிய அறிமுகத்தை Motorola அறிவித்துள்ளது. வியாழனன்று, இந்தியாவில் Moto G8 Plus-ன் 4GB RAM + 64GB ஸ்டோரேஜின் விலை ரூ. 13,999 என  விலைக் குறியீட்டைக் கொண்டது. மறுபுறம், Motorola One Macro-யின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜின் விலை ரூ. 9,999-க்கு இந்திய சந்தையில் ஏற்கனவே கிடைக்கிறது.

Moto G8 Plus ஏற்கனவே பிரேசில் மற்றும் மெக்ஸிகோவில் வாங்குவதற்கு கிடைக்கிறது. மேலும், ஐரோப்பாவில் EUR 269 (சுமார் ரூ. 21,200) விலை குறியீட்டை அடைய உள்ளது. 

அதேபோல், Motorola One Macro, பிரேசில், மெக்ஸிகோ மற்றும் அனைத்து ஐரோப்பிய சந்தைகளிலும் EUR 199 (சுமார் ரூ.15,700) விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது லத்தீன் அமெரிக்காவின் பல்வேறு நாடுகளையும், ஆசியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளையும் வரும் மாதங்களில் சென்றடையும்.


Moto G8 Play-வின் சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Moto G8 Play, Android 9 Pie-யால் இயங்குவதோடு, 6.2-inch Max Vision HD+ டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டது. ஹூட்டின் படி, இந்த போன் 2GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core MediaTek Helio P70M SoC-யால் இயக்கப்படுகிறது.

புகைப்பங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Moto G8 Play-வில் 117-degree of a field of view (FoV)-வை வழங்க f/2.0 lens உடன் 13-megapixel முதன்மை கேமரா மற்றும் ultra-wide-angle f/2.2 lens உடன் 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் ஆகிறவற்றுடன் triple rear கேமரா அமைப்பும் உள்ளது. f/2.2 lens உடன் பின்புற கேமரா அமைப்பில் 2-megapixel depth சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8-megapixel செல்ஃபி கேமரா உள்ளது.

Moto G8 Play, 32GB ஆன்பேர்டு ஸ்டோரேஜுடன் microSD card வழியாக 512GB வரை விரிவாக்கக்கூடியது. இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, USB Type-C மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light, fingerprint reader, gyroscope மற்றும் proximity sensor ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் 4,000mAh பேட்டரியை பேக் செய்வதோடு 183.6 கிராம் எடையும் கொண்டது.

moto e6 play image Moto E6 Play

Moto E6 Play-வின் சிறப்பம்சங்கள்:

டூயல்-சிம் (நானோ) Moto E6 Play, Android 9 Pie-யால் இயங்குகிறது. 18:9 aspect ratio மற்றும் 295ppi of pixel density உடன் 5.5-inch HD+ (720x1440 pixels) Max Vision டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 2GB RAM உடன் இணைக்கப்பட்டு, quad-core MediaTek MT6739 SoC-யால் இயங்குகிறது.

Moto E6 Play-யின் பின்புறத்தில் f/2.2 lens உடன் 13-megapixel ஒன்றை கேமரா சென்சாரைக் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக, முன்புறத்தில் f/2.2 lens உடன் மேலே 5-megapixel கேமரா சென்சாரைக் கொண்டுள்ளது.

Moto E6 Play, 32GB இண்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டது. இது, microSD card வழியாக 256GB வரை விரிவாக்கக்கூடியது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM radio, Micro-USB மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light, fingerprint reader மற்றும் proximity sensor ஆகியவை அடங்கும். இறுதியாக, இந்த போன் 3,000mAh பேட்டரியை பேக் செய்வதோடு 140 கிராம் எடையும் கொண்டது.

  • KEY SPECS
  • NEWS
Display 5.50-inch
Processor MediaTek MT6739
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 2GB
Storage 32GB
Battery Capacity 3000mAh
OS Android 9 Pie
Resolution 720x1440 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »