மோட்டோரோலா எட்ஜ் மற்றும் மோட்டோரோலா எட்ஜ் + ஆகியவை வளைந்த டிஸ்ப்ளே மற்றும் வேவ்ஸ் டியூன் செய்த இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளன.
மோட்டோரோலா எட்ஜ் மற்றும் மோட்டோரோலா எட்ஜ் + 90Hz டிஸ்ப்ளேக்களைக் கொண்டுள்ளன
மோட்டோரோலா எட்ஜ் மற்றும் மோட்டோரோலா எட்ஜ் + ஆகியவை அறிமுகமாகியுள்ளன. இரண்டு Motorola போன்களும் ஹோல்-பஞ்ச் வடிவமைப்பு மற்றும் மூன்று பின்புற கேமராக்களுடன் வளைந்த டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன. இந்த போன்களில் வேவ்ஸ் டியூன் செய்த இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன.
Motorola Edge விலை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த போன் சோலார் பிளாக் மற்றும் மிட்நைட் மெஜந்தா ஷேடில் வருகிறது.
Motorola Edge+ விலை 999 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.76,400)-யாக உள்ளது. இந்த போன் ஸ்மோக்கி சாங்ரியா மற்றும் தண்டர் கிரே ஆப்ஷன்களில் கிடைக்கும்.
மோட்டோரோலா எட்ஜ் + 108 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது
இந்த போனில் ஒரே ஒரு சிம் மட்டுமே உள்ளது. இது ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வளைந்த 6.7 அங்குல முழு எச்டி + ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகிறது.
மோட்டோரோலா எட்ஜ் +-ல் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. பிரதான கேமரா 6f வீடியோக்களை 30fps-ல் பதிவுசெய்யும் திறன் கொண்டது. இதில் 117 டிகிரி பார்வையுடன் 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் உடன் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. போனில் (ToF-Time of Flight) சென்சாரும் உள்ளது. முன்பக்கத்தில், 25 மெகாபிக்சல் கேமராவையும் கொண்டுள்ளது
போனில் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் உள்ளது. இதை விரிவாக்கம் செய்ய முடியாது. அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இந்த போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. சுவாரஸ்யமாக, மோட்டோரோலா எட்ஜ் + 3.5 மிமீ ஹெட்போன் ஜாக்கை வைத்திருக்கிறது.
மோட்டோரோலா எட்ஜ் 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது
இந்த போனில், டூயல்-சிம் (நானோ) ஸ்லாட் உள்ளது. இது ஆண்ட்ராய்டு 10-ல் இயக்குகிறது. இது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வளைந்த 6.7 அங்குல முழு எச்டி + ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 SoC ஆல் இயக்கப்படுகிறது. மேலும், கிராபிக்ஸ் கையாள 6 ஜிபி ரேம் மற்றும் அட்ரினோ 620 ஜி.பீ.யுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ்-ல் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. இதில் 117 டிகிரி பார்வையுடன் 16 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் உடன் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. போனின் பின்புறத்தில் ஒரு (ToF-Time of Flight) சென்சாரும் உள்ளது. முன்பக்கத்தில், 25 மெகாபிக்சல் கேமராவையும் கொண்டுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் + ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் வழங்குகிறது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Galaxy S27 Ultra Camera Processing May Change From Galaxy S26 Ultra; Might Drop Dedicated 3X Telephoto Lens
Noise Homestage Soundbar Series Launched in India With Dolby Atmos, Up to 700W Output: Price, Features