மோட்டோரோலா எட்ஜ் + விரைவில் இந்தியாவுக்கு வருகிறது.
மோட்டோரோலா எட்ஜ் + அமெரிக்கா, ஐரோப்பாவில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்தது
Motorola எட்ஜ் +, கடந்த வாரம் புதன்கிழமை வளைந்த டிஸ்ப்ளே மற்றும் 108 மெகாபிக்சல் கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் ரூ.75,000 மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையை எட்டும் என்று மோட்டோரோலா இந்தியாவின் தலைவர் பிரசாந்த் மணி கூறுகிறார்.
மோட்டோரோலா இந்தியாவின் தலைவர் பிரசாந்த் மணி, சனிக்கிழமையன்று மோட்டோரோலா எட்ஜ் + இன் அம்சங்கள் குறித்து ட்வீட் செய்ததோடு, இந்த போன் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்றும் கூறினார். ட்வீட்டில், போனை உருவாக்கும் செயல்முறை மற்றும் மோட்டோரோலாவின் இந்த போனின் அம்சங்கள் ஆகியவற்றைக் காட்டும் வீடியோவையும் மணி பகிர்ந்துள்ளார்.
இருப்பினும், மோட்டோரோலா எட்ஜின் வெளியீடு அல்லது விலை பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இந்தியாவில் இந்த இரண்டு போன்களும் மிகவும் மலிவாக இருக்கும்.
Motorola Edge+ என்பது ஒற்றை சிம் போனாகும். இது ஆண்ட்ராய்டு 10-ல் இயங்குகிறது. இந்த போன், வளைந்த 6.7 இன்ச் முழு எச்டி + ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காமின் முதன்மை ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்டில் இயங்குகிறது மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக, மோட்டோரோலா எட்ஜ் + 3.5 மிமீ headphone jack உடன் வருகிறது.
இந்த போன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முதன்மை கேமராவில் மிகப்பெரிய 108 மெகாபிக்சல் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முதன்மை சென்சார் 6 கே வீடியோவை 30fps-ல் பதிவுசெய்யும் திறன் கொண்டது. மேலும், 16 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளது. மோட்டோரோலா, Time of Flight (ToF) சென்சாரையும் வழங்கியுள்ளது. முன்பக்கத்தில் 25 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
போனில் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் உள்ளது. மோட்டோரோலா எட்ஜ் + 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இந்த போன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Physicists Reveal a New Type of Twisting Solid That Behaves Almost Like a Living Material
James Webb Telescope Finds Early Universe Galaxies Were More Chaotic Than We Thought
Next-Gen Xbox Will Be 'Very Premium, Very High-End Curated Experience', Says Xbox President Sarah Bond