Photo Credit: Flipkart
Motorola Edge மற்றும் Motorola Edge+ ஆகியவை சமீபத்தில் அமெரிக்காவில் தொடங்கப்பட்டன. மோட்டோரோலா எட்ஜ் + ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 108 மெகாபிக்சல் கேமரா மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது. இந்த போனின் விலைகள் அமெரிக்காவில் 999 டாலரில் தொடங்குகின்றன. சமீபத்தில், மோட்டோரோலா எட்ஜ் + விரைவில் இந்தியாவுக்கு வருவதாக நிறுவனம் அறிவித்தது. இறுதியாக, Flipkart-ல் வெளியிடப்பட்ட டீஸரில் இந்த போன் மே 19 அன்று இந்தியாவுக்கு வருவதாக தெரியவந்தது.
மோட்டோரோலா எட்ஜ் + விலை 999 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.76,400) ஆகும். மோட்டோரோலா இந்த போனின் விலையை இந்தியாவில் அறிவிக்கவில்லை. இந்தியாவைத் தவிர, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும்.
ஒற்றை சிம் மோட்டோரோலா எட்ஜ் +, ஆண்ட்ராய்டு 10-ல் இயக்கும். இந்த போனில் 6.7 அங்குல FHD + OLED டிஸ்ப்ளே உள்ளது. போனில் 90Hz புதுப்பிப்பு வீதத்துன் வளைந்த டிஸ்ப்ளே வடிவமைப்பு உள்ளது. HDR10 + சான்றிதழ் உள்ளது. போனின் உள்ளே ஒரு ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் உள்ளது.
இந்த போனில், ஆப்டிகல் பட உறுதிப்படுத்தலுடன் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. இந்த கேமரா 6 கே வீடியோக்களை பதிவு செய்யும். 16 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. இந்த கேமராவில் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல் உள்ளது. இதில் Time of Flight (ToF) சென்சார் உள்ளது. இந்த போனின் முன்பக்கத்தில் 25 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
போனின் உள்ளே 5,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜ் மற்றும் வயர்லெஸ் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்