மோட்டோரோலாவின் புதிய போனான மோட்டோ ஜி 8 பவர் லைட் அறிமுகம். ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று மெகாபிக்சல் பிரதான சென்சார் உள்ளது. இந்த போன் பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.
Moto G8 Power Lite-ன் விலை யூரோ 169 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,900). இந்த போன் முதலில் மெக்சிகோ மற்றும் ஜெர்மனியில் கிடைக்கும். இந்த போன் ஆர்க்டிக் ப்ளூ மற்றும் ராயல் ப்ளூ ஆப்ஷன்களில் வருகிறது.
மோட்டோ ஜி 8 பவர் லைட், வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்சுடன் 6.5 இன்ச் (729x1600 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு பையில் இயங்குகிறது. 4 ஜிபி ரேம் உடன் இனணைக்கப்பட்டு 2.3GHz MediaTek Helio P35 SoC-யால் இயக்கப்படுகிறது. 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் உள்ளது. இதனை மைக்ரோ எஸ்டி கார்டைப் மூலம் (256 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம்.
டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் 16 மெகாபிக்சல் மெயின் ஸ்னாப்பர் உள்ளது. இதற்கு 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் லென்ஸ் உதவுகிறது. கேமரா அம்சங்களில் HDR, beauty mode, dual camera blur effect, timer, panorama, Google Lens integration ஆகியவை உள்ளன. போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
மோட்டோ ஜி 8 பவர் லைட், 10W சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரி 19 மணிநேர வீடியோ பிளேபேக் மற்றும் 100 மணிநேர ஆடியோ பிளேபேக் வழங்கும். போனில் நீர் விரட்டும் மற்றும் பின்புற கைரேகை சென்சார் உள்ளது. இந்த போன் 164.94x75.76x9.2 மிமீ அளவு மற்றும் சுமார் 200 கிராம் எடை கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்