மோட்டோ ஜி ஃபாஸ்ட் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் செயலி மற்றும் 3 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படும்.
Photo Credit: YouTube/ Umair's Wishlist
மோட்டோ ஜி ஃபாஸ்டில் செல்ஃபி கேமராவுக்கு ஒரு ஹோல்-பஞ்ச் இருக்கும்
Motorola, அதன் ஜி சீரிஸில் மற்றொரு ஸ்மார்ட்போனை கொண்டு வருகிறது. மோட்டோ ஜி ஃபாஸ்ட் போன் சமீபத்தில் வெளியான விளம்பரத்தில் காணப்பட்டது. இந்த வீடியோவை தவறுதலாக வெளியிட்ட சிறிது நேரத்திலேயே நிறுவனம் அதை நீக்கியது. விளம்பரத்தில், இந்த ஸ்மார்ட்போன் ஒரே சார்ஜில் இரண்டு நாட்கள் நீடிக்கும் என்று நிறுவனம் கூறியது.
மோட்டோ ஜி ஃபாஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த போனில், குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளது. இது 3 ஜிபி ரேம் உடன் வரும். போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் இருக்கும். மேக்ரோ கேமரா மற்றும் அல்ட்ரா வைட் கேமரா இருக்கும். நிறுவனம் இந்த போனில் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளேவை வழங்கியுள்ளது.
வால்யூம் மற்றும் பவர் பொத்தான்கள் போனின் வலது பக்கத்தில் உள்ளன. டிஸ்ப்ளேவைச் சுற்றி ஒப்பீட்டளவில் பரந்த பெசல்கள் இருக்கும். மோட்டோ ஜி ஃபாஸ்ட்-ன் பின்புறத்தில் உள்ள கைரேகை சென்சார் நிறுவனத்தின் லோகோவைக் கொண்டுள்ளது.
இந்த போனை அமெரிக்காவில் 220 டாலர் (ரூ.16,600)-க்கு அறிமுகமாகவுள்ளது. 3 ஜிபி ரேம் தவிர, இந்த போன் 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் வகைகளில் வரக்கூடும். மோட்டோரோலா தற்போது இந்த போனை அமெரிக்காவில் அறிமுகப்படுத்துகிறது.
Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Bethesda Announces Fallout 4 Anniversary Edition, Nintendo Switch 2 Launch Set for 2026
Starlink Reportedly Plans Nine Gateway Earth Stations Across India to Relay Internet Traffic