வரும் 15 (திங்கள்), 16 (செவ்வாய்) ஆகிய 2 தினங்களில் அதிக ஆஃபர்களுடன் சேவையை வழங்கவுள்ள அமேசான்.
ஸ்மார்ட் போன்களின் விலை அமேசான் ப்ரைம் டே சேல் அன்று அதிக ஆஃபர்களுடன் வழங்கப்படவுள்ளன.
நாளை மறுதினம் தொடங்கவுள்ள அமேசான் ப்ரைம் டே விற்பனையில், லேட்டஸ்ட் மொபைல்களுக்கு அதிக ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ப்ரைம் டே விற்பனையில் அமேசானின் ப்ரைம் வாடிக்கையாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
அதிக ஆஃபர்கள் 15-ம்தேதி திங்கள்கிழமைதான் ஆரம்பாகும். இருப்பினும், டீல்கள் குறித்த சில விவரங்களை அமேசான் வெளியிடத் தொடங்கியுள்ளது. குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிக ஆஃபர்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியான மொபைல்களில் ஒன் ப்ளஸ் 7, சாம்சங்க கேலக்ஸி எம்40 உள்ளிட்ட போன்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதிலும் பட்ஜெட் ரேட்டில் விற்பனையாகும் சாம்சங் எம்40 ஆன்லைனை பொறுத்தளவில் அமேசானில் மட்டுமே கிடைக்கிறது.
6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்பீல்ட் மெமரி கொண்ட ஒன்ப்ளஸ் ரூ. 32,999-க்கு விற்பனையாகிறது. இதேபோன்று சாம்சங் எம் 20, ரியல் மீ யு1, நோக்கிய 6.1 ப்ளஸ் உள்ளிட்ட போன்களின் விலையும் அதிரடி குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
அமேசான் ப்ரைம் டேயில் அதிரடி விலைக்குறைப்பு செய்யப்பட்ட போன்களின் பட்டியலை கீழே பார்க்கலாம். முதலில் அமேசான் ப்ரைம் டே விலையும், அடைப்புக்குறிக்குள் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை எம்.ஆர்.பி. குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Microsoft Patches Windows 11 Bug After Update Disabled Mouse, Keyboard Input in Recovery Mode
Assassin's Creed Shadows Launches on Nintendo Switch 2 on December 2