App Drawer அம்சம் பெறும் MIUI 11!

App Drawer அம்சம் பெறும் MIUI 11!

பிரத்யேக app drawer உடன் புதுப்பிக்கப்பட்ட MIUI Launcher-ஐ MIUI 11 பெற்றுள்ளது

ஹைலைட்ஸ்
  • முகப்புத் திரை அமைப்புகளில் app drawer MIUI 11 கொண்டுள்ளது
  • பயனர்கள் வழக்கமான முகப்புத் திரைக்கும் app drawer-க்கும் இடையில் மாறலாம்
  • Poco Launcher ஏற்கனவே இதேபோன்ற app drawer-ஐக் கொண்டுள்ளது
விளம்பரம்

MIUI 11 இப்போது புதிய MIUI Launcher அப்டேட் பெறுகிறது. இது எதிர்பார்த்த app drawer-ஐக் கொண்டுள்ளது. Xiaomi அதன் MIUI துவக்கியின் முகப்புத் திரையில் செயலிகளை இன்ஸ்டால் செய்யும் திறனை நீண்ட காலமாக வழங்கியுள்ளது - iOS-ல் செயலிகல் எவ்வாறு கிடைக்கின்றன என்பது போல. இருப்பினும், சீன நிறுவனம் இப்போது இன்ஸ்டால் செய்யப்பட்ட அனைத்து செயலி ஐகான்களையும் பிரத்யேக திரையில் சேர்க்க app drawer வழங்கத் தொடங்கியுள்ளது. இது போகோ துவக்கியில் (Poco Launcher.) கிடைக்கும் app drawer-ஐப் போலவே இருக்கிறது. MIUI 11-ல் app drawer-ன் முன்னிலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.

App Drawer ஆதரவுடன் MIUI 11-ஐ புதுப்பித்ததாக வெய்போ பதிவின் மூலம் ஜியோமி அறிவித்துள்ளது. பயனர்கள் தங்கள் MIUI 11 சாதனத்திற்கான சமீபத்திய MIUI துவக்கியை (Launcher) இன்ஸ்டால் செய்வதன் மூலம் app drawer-ஐக் காணலாம். முகப்புத் திரை அமைப்புகளுக்குள் வழக்கமான முகப்புத் திரை அனுபவத்திற்கும் பிரத்யேக app drawer-க்கும் இடையில் மாற விருப்பம் உள்ளது. இப்போதைக்கு, இந்த அம்சம் MIUI 11 Global Stable ROM-க்கு செல்லும் என்பது நிச்சயமற்றது. இந்தியாவில் வெளியிடப்படும் மிகச் சமீபத்திய அப்டேட்கள் இந்த அம்சத்தைக் கொண்டிருக்கவில்லை.

வழக்கமான முகப்புத் திரை அனுபவத்தின் கீழ், MIUI துவக்கி (Launcher) இன்ஸ்டால் செய்யப்பட்ட எல்லா செயலிகளையும் முகப்புத் திரையில் வைக்கிறது. முகப்புத் திரையில் நேரடியாக அன்-இன்ஸ்டால் செயலிகளை விருப்பத்துடன் குறுக்குவழிகளையும் காண்பீர்கள். இருப்பினும், நிறுவப்பட்ட எல்லா செயலிகளையும் தனித் திரையில் கொண்டுவரும் app drawer விருப்பத்திற்கு நீங்கள் மாறும்போது இது அப்படி இருக்காது.

முகப்புத் திரையில் ஸ்வைப் செய்வதன் மூலம் app drawer விரிவுபடுத்துகிறது மற்றும் சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட எல்லா செயலிகளையும் மேலே வைக்கிறது. கீழே உருட்டுவதன் (scrolling down) மூலம் app drawer இருந்து இன்ஸ்டால் செய்யப்பட்ட எல்லா செயலிகளையும் பயனர்கள் காணலாம்.

MIUI Launcher, app drawer-ஐக் கொண்டிருக்கவில்லை என்றாலும், ஜியோமி Poco Launcher-க்கு இதே போன்ற அனுபவத்தை வழங்கியது. மேலும், ஜூன் மாதத்தில் நிறுவனம் அதன் MIUI துவக்கியில் (Launcher) app drawer சோதனை செய்தது.

கடந்த வாரம், ஜியோமி customisable lock screen மற்றும் Curriculum Mode-ஐ MIUI 11-க்கு கொண்டு வருவதற்கான திட்டங்களைக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. MIUI 11 அப்டேட், Redmi K20, Poco F1, Redmi 6 Pro, Redmi 8 மற்றும் Redmi 8A உள்ளிட்ட சமீபத்திய காலங்களில் ஜியோமி தொலைபேசிகளின் பட்டியலையும் எட்டியுள்ளது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: MIUI 11, Xiaomi
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Nothing நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு செல்போனை எதிர்பார்க்கலாம்
  2. Galaxy S25 Edge செல்போன் சஸ்பென்ஸ் மேல் சஸ்பென்ஸ் எகிறவிடும் சாம்சங்
  3. Samsung Galaxy S25 Ultra புடிச்சா குதிரை கொம்பா தான் புடிக்கணும்
  4. Samsung Galaxy S25, Galaxy S25+ கொடுக்கும் விலைக்கு என்ன இருக்கு இதில்?
  5. WhatsApp Status வைத்தால் Facebook, Instagram போகும்! அதிரி புதிரி அப்டேட்
  6. Redmi K90 Pro செல்போன் மிரள விடும் அம்சங்களுடன் வருகிறது
  7. இந்தியாவுக்கு வரும் புது iQOO போன் எல்லாமே சும்மா மெர்சல் ரகம்
  8. அண்டத்தை கண்காணிக்கும் சிசிடிவியா இந்த ஹபிள் தொலைநோக்கி?
  9. இது மட்டும் தெரிந்திருந்தால் Samsung Galaxy S25 செல்போனே வாங்கி இருப்பேனே
  10. வீடியோ செம்மயா வரும்! Instagram தரப்போகும் செம்ம எடிட் வசதிகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »