ஜியோமி Mi சூப்பர் சேலின் மற்றோரு பதிப்பை 2020-ஆம் ஆண்டில் தொடங்குகிறது. விற்பனை ஏற்கனவே நடந்து வருகிறது, இது ஜனவரி 8 வரை தொடரும். இந்த காலகட்டத்தில், நிறுவனம் Redmi Note 7 Pro, Redmi K20 series, Poco F1 மற்றும் Redmi Note 7S போன்களில் no-cost EMI ஆப்ஷன்களை வழங்கும். இந்த போன்களும் விலைக் குறைப்புகளைக் காணும். மேலும், Redmi 8A, Redmi Go, Redmi Y3 மற்றும் Redmi 7A போன்ற கூடுதல் சாதனங்களும் குறைக்கப்பட்ட விலைக் குறியீட்டுடன் பட்டியலிடப்படும்.
Redmi Note 7 Pro-வின் 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 9,999-யாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் ரூ. 4,000 விலைக் குறைப்புடன் Mi.com-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. Redmi Note 7 Pro-வின் 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 12,999-யாகவும், அதன் 6GB + 128GB மாடல் ரூ. 14,999-யாகவும் தள்ளுபடியுடன் விலையிடப்படுள்ளது.
Redmi Note 7S-ன் 3GB + 32GB மாடல் ரூ. 8,999-யாகவும், அதன் 4GB + 64GB மாடல் ரூ. 9,999-யாகவும் விலையிடப்படுள்ளது. இதன் பொருள் ரூ. 2,000 விலைக் குறைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நினைவுகூர, இந்த வேரியண்டுகளின் விலை முறையே ரூ. 9,999 மற்றும் ரூ. 11,999-யாக விலையிடப்பட்டுள்ளது.
Xiaomi, Redmi K20-யிலும் ரூ. 2,000 தள்ளுபடியை வழங்குகிறது. அதன் 6GB + 64GB மாடலின் விலை இப்போது ரூ. 19,999-யில் இருந்து தொடங்குகிறது. அதன் 6GB + 128GB மாடல் Mi.com-ல் ரூ. 22,999 விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதன் வழக்கமான விலை 64GB-க்கு ரூ. 21,999-யாகவும் 128GB மாடல் ரூ. 23,999-யாகவும் உள்ளது. இதேபோல், Redmi K20 Pro-வின் 6GB + 128GB மாடல் ரூ. 3,000 விலைக்குறைப்புடன் ரூ. 24,999-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போனின் 8GB+256GB வேரியண்டும் Mi.com store-ல் இருந்து ரூ. 27,999-யாக குறைக்கப்பட்டுள்ளது.
பிரபலமான Poco F1-ன் 64GB மற்றும் 256GB வேரியண்டுகளின் விலை முறையே ரூ. 14,999 மற்றும் ரூ. 18,999-யாக பட்டியலிடப்படுள்ளது. நினைவுகூர, வழக்கமாக Poco F1-ன் 6GB RAM + 64GB ஸ்டோரேஜ் ரூ. 17,999-யாகவும், அதன் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 22,999-யாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பொருள் ரூ. 4,000 விலைக்குறைப்பு வழங்கப்படுகிறது.
பட்ஜெட் பிரிவிற்கு வரும்போது, Xiaomi, Redmi 7A-வின் 2GB+16GB வேரியண்ட் ரூ. 4,999-க்கும், அதன் 2GB+32GB பதிப்பை ரூ. 5,499-க்கும் வழங்குகிறது. Redmi Go ரூ. 4,499-யாக பட்டியலிடப்பட்டுள்ளது. Redmi 8A ரூ. 6,499-யில் இருந்து தொடங்குகிறது. Mi Super Sale-ல் உள்ள அனைத்து ஒப்பந்தங்களும் Xiaomi-யின் அர்ப்பணிப்பு விற்பனை பக்கத்தில் (sale page) காணலாம்.
ஸ்மார்ட்போன் | வழக்கமான விலை (ரூ.) | தள்ளுபடி விலை (ரூ.) |
---|---|---|
Redmi Note 7 Pro 4GB+64GB | 13,999 | 9,999 |
Redmi Note 7S 4GB+64GB | 11,999 | 9,999 |
Redmi K20 6GB+64GB | 21,999 | 19,999 |
Poco F1 8GB+256GB | 22,999 | 18,999 |
Redmi 7A 2GB+326GB | 6,199 | 5,499 |
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்