எம்ஐ நோட் 10 லைட்-ன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 349 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.29,900) ஆகும்.
எம்ஐ நோட் 10 லைட் மூன்று வெவ்வேறு கலர் ஆப்ஷன்களில் வழங்கப்படும்
Xiaomi, மிட்ரேஞ்ச் பிரிவில் மற்றொரு புதிய போனை எம்ஐ நோட் 10 லைட்-ஐ வியாழக்கிழமையன்று அறிமுகப்படுத்தியது. சீன நிறுவனம் எம்ஐ நோட் 10 மற்றும் எம்ஐ நோட் 10 ப்ரோவுக்குப் பிறகு இந்த சீரிஸில் இது மூன்றாவது போனாகும். இந்த போன் ஒரு 3டி வளைந்த AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 730 ஜி சிப்செட், நான்கு கேமராக்கள் மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. இந்த போன் மூன்று நிறங்களில் கிடைக்கும்.
Mi Note 10 Lite-ன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 349 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.29,900),
அதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 399 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.33,100) ஆகும்.
நிறுவனம் 8 ஜிபி ரேம் கொண்ட போனையும் கொண்டு வரும். அந்த வேரியண்டின் விலை தெரியவில்லை.
இந்த போன் வெள்ளை, கருப்பு மற்றும் ஊதா நிறங்களில், மே மாதத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு வரும்.
எம்ஐ நோட் 10 லைட், Android 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மேல் MIUI 11-ல் இயக்கும். இந்த போனில் 6.47 அங்குல FHD + 3டி வளைந்த AMOLED டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஒரு Qualcomm Snapdragon 730G சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது.
போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 64 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் வருகிறது. செல்பி எடுக்க 32 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இணைப்பிற்காக, இந்த போனில் 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, IR blaster மற்றும் USB Type-C உள்ளது. டிஸ்ப்ளேவுக்கு கீழே கைரேகை சென்சார் உள்ளது. போனின் உள்ளே, 30W ஃபாஸ்ட் சார்ஜிங் உதவியுடன் 5,260 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. போனின் எடை 208 கிராம் ஆகும்.
Is iPhone SE the ultimate 'affordable' iPhone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online
Wheel of Fortune India OTT Release: When, Where to Watch Akshay Kumar-Hosted Global Game Show