சியோமி சார்பில் எம்ஐ 'ரசிகர் திருவிழா' வரும் ஏப்ரல் 4 முதல் 6 வரை நடைபெற உள்ளது. இந்த மூன்று நாள் சேலில் போக்கோ எஃப் 1, ரெட்மி நோட் 6 ப்ரோ, எம்ஐ LED TV 4 ப்ரோ, எம்ஐ பேன்ட் (Mi Band) மற்றும் எம்ஐ ஏர் பியூரிஃபையர் 2S (Mi Air Purifier) போன்ற தயாரிப்புகள் தள்ளுபடி பெருகின்றன.
இத்துடன் சியோமி சார்பில் நடக்கும் ரூ.1 எம்ஐ ஃபிளாஷ் சேல் மற்றும் புதிய மிஸ்டிரி பாக்ஸ் சேலும் இந்த சேலுடன் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி திருவிழா எம்ஐ.காம், எம்ஐ ஹோம், எம்ஐ ஸ்டோர்களில் நடைபெறுகின்றது என்பது கூடுதல் தகவல்.
எம்ஐ ஃபேன் ஃபெஸ்டிவலில் தள்ளுபடி பெறும் சியோமி தயாரிப்புகள்:
சியோமி நிறுவனம் சார்பில் வெளியான தகவலின்படி, போகோ எஃப்1 6ஜிபிரேம்/128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல், தள்ளுபடி பெற்று ரூ.20,999க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. ரெட்மி நோட் 5 ப்ரோ தயாரிப்பின் 4ஜிபிரேம்/64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட மாடல் மற்றும் 6ஜிபிரேம்/64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட மாடல் தயாரிப்புகள் ரூ.10,999 மற்றும் ரூ.11,999க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த தயாரிப்பின் தொடர்ச்சியாக வெளியான ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4ஜிபிரேம்/64ஜிபி சேமிப்பு வசதிகொண்ட மாடல் ரூ.3000 வரை விலை சரிந்து தற்போது ரூ.10,999க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
மேலும் வெளியாகியுள்ள தகவல்கள்படி, இந்த தள்ளுபடி திருவிழாவில் புதிய தயாரிப்புகளான ரெட்மி நோட் 7, ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் ரெட்மி கோ போன்களும் தள்ளுபடி பெருகின்றன. இந்த சேல் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி மதியம் 12 முதல் துவங்குகிறது.
சியோமி சார்பில் எம்ஐ கோம்பேக்ட் புளூடூத் ஸ்பீக்கர் 2 (ரூ.699), எம்ஐ இயர்போன்ஸ் (ரூ.599), எம்ஐ பாடி காம்போசிஷன் (ரூ.1,499), எம்ஐ ஏர் பியூரிஃபையர் 2S (ரூ.8,499) போன்றவைகள் தள்ளுபடி பெறுகின்றன. சியோமி இந்த சேலுக்காக ஹெச்டிஃப்சி வங்கியுடன் இணைந்து எம்ஐ தொலைக்காட்சி அல்லது சவுண்டு பார் வாங்கும் நபர்களுக்கு 5% உடனடி தள்ளுபடியைத் தருகிறது.
ஒவ்வொரு வருடத்தைப் போலவும் சியோமி நிறுவனம் சார்பில் 'பிளேஆண்டு வின்' போன்ற விளையாட்டுகளை அறிமுகம் செய்கிறது. இந்த போட்டியில் பங்கேற்று ஜெயிப்பவர்களுக்கு பல தயாரிப்புகள் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த கேம் சேல், விற்பனை நாட்களின் மதியம் 2 மணிக்கு நடக்க உள்ளது.
மேலும் 'மிஸ்டிரி பாக்ஸ்' சேலில் ரூ.2,400 மதிப்புள்ள ஒரு பாக்ஸ் பொருட்களை ரூ.99க்குப் பெற முடிகிறது. இந்த கேம் சேல் நாட்களில் மதியம் 4 மணிக்கு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய வாடிக்கையாளர்களிடம் சியோமி தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இந்த சேலின் மூலம் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க சியோமி முயற்சிப்பதாக தெரிகிறது.
மேலும் படிக்க: ரியல்மி 3 ஸ்மார்ட்போன் நிகழ்த்திய புதிய விற்பனை சாதனை!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்