இன்று அறிமுகமாகிறது 'Mi CC9, Mi CC9e' ஸ்மார்ட்போன்கள், எதிர்பார்க்கப்படுவது என்ன?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 2 ஜூலை 2019 16:40 IST
ஹைலைட்ஸ்
  • Mi CC9 ஸ்மார்ட்போன் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது
  • இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 730 ப்ராசஸர் கொண்டிருக்கலாம்
  • Mi CC9e ஸ்மார்ட்பொனில் ஸ்னேப்ட்ராகன் 710 ப்ராசஸர் பொருத்தப்பட்டிருக்கலாம்

3 பின்புற கேமராக்களை கொண்ட 'Mi CC9, Mi CC9e' ஸ்மார்ட்போன்கள்

சியோமி நிறுவனம், இளைஞர்களை மையப்படுத்தி தயாரித்துள்ள 'Mi CC9 மற்றும் Mi CC9e' ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சீனாவில் ஒரு நிகழ்வின் மூலமாக இந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது சியோமி நிறுவனம். சியோமியின் இந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து பல அதிகாரப்பூர்வமான செய்திகளும் வந்தன, பல அதிகாரமற்ற தகவல்களும் கசிந்தன. 'Mi CC9, Mi CC9e' ஸ்மார்ட்போன்களுடன் Mi CC9 மெய்டுவின் ஒரு சிறப்புப் பதிப்பு ஸ்மார்ட்போன்,  3 பின்புற கேமராக்கள், 48 மெகாபிக்சல் பின்புற கேமரா, 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, நீல நிறத்தில் அட்டகாசமான பார்வையுடன் Mi CC9 ஸ்மார்ட்போன், போன்ற பல தகவல்கள்.

அதை தாண்டி நீங்கள் இந்த ஸ்மார்ட்போன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், இந்த ஸ்மார்ட்போன் எந்த விலையில் அறிமுகமாகலாம், இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு எங்கு நடைபெருகிறது, எப்போது துவங்குகிறது, முழு தகவல்கள் உள்ளே!

'Mi CC9, Mi CC9e' ஸ்மார்ட்போன்கள்: அறிமுக நிகழ்வு!

சீனாவில் நடைபெறவுள்ள இந்த 'Mi CC9 மற்றும் Mi CC9e' ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வு ஆசிய மத்திய நிலையான நேரப்படி மாலை 7:30 மணிக்கு துவங்கவுள்ளது. இந்திய நேரப்படி மாலை 5 மணி. இந்த நிகழ்ச்சியின் நேரலை, சியோமி நிறுவனத்தின் வெய்போ கணக்கு மற்றும் அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான தளத்தில் ஓளிபரப்பாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் நேரலையை அங்கு காணலாம்.

Mi CC9 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் விலை!

இந்த ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு கொண்ட Mi CC9 ஸ்மார்ட்போனின் விலை 2,599 யுவான்கள் (26,200 ரூபாய்). 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு அளவு கொண்ட மற்ற இரு வகைகளும் 2,799 யுவான்கள் (28,200 ரூபாய்) மற்றும் 3,099 யுவான்கள் (31,300 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mi CC9e ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் விலை!

Advertisement

Mi CC9 ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் மற்றொரு ஸ்மார்ட்போனான Mi CC9e-யும் மூன்று வகைகளிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவு,  6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு மற்றும்  8GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு என்ற இந்த மூன்று வகைகள் 1,599 யுவான்கள் (16,100 ரூபாய்), 1,899  யுவான்கள் (19,200 ரூபாய்) மற்றும் 2,199 யுவான்கள் (22,200 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mi CC9 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!

Advertisement

Mi CC9 ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன், ஸ்னெப்ட்ராகன் 730 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகலாம். மூன்று பின்புற கேமராக்களுடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டிருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. 16 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் என்ற அளவில் மற்ற இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டிருக்கும். இன்-டிஸ்ப்லே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டை-C சார்ஜிங் போர்டுடன் 3,940mAh பேட்டரி, 27W சார்ஜர் பொன்றவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என அவர் தகவல் வெளியிட்டிருந்தார். 

Mi CC9e ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!

Mi CC9e ஸ்மார்ட்போன் 6.08-இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன், ஸ்னெப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு வெளியாகலாம். மூன்று பின்புற கேமராக்களுடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என்ற அளவில் மற்ற இரண்டு கேமராக்களை கொண்டிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 3,940mAh பேட்டரி, 18W சார்ஜர் பொன்றவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என அவர் தகவல் வெளியிட்டிருந்தார். Mi CC9 போலவே இந்த ஸ்மார்ட்போனும் இன்-டிஸ்ப்லே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டை-C சார்ஜிங் போர்டுடன் வெளியாகலாம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Game of Thrones ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! Realme 15 Pro 5G-யின் ஸ்பெஷல் எடிஷன் ஃபோன்
  2. Game of Thrones ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! Realme 15 Pro 5G-யின் ஸ்பெஷல் எடிஷன் ஃபோன்
  3. Amazon-ன் Great Indian Festival விற்பனையில் JBL, Boat மற்றும் Zebronics Party Speakers-களுக்கு 72% வரை தள்ளுபடி
  4. பட்ஜெட் கவலை இனி இல்லை! Amazon-ன் Great Indian Festival Sale-ல் HP, Lenovo, Dell, Asus Laptops-களுக்கு 40% வரை தள்ளுபடி!
  5. Xiaomi-யின் புதிய ஃபிளாக்ஷிப் போன் Xiaomi 15T Pro உடன் MediaTek Dimensity 9400+ சிப்செட் அறிமுகம்!
  6. Amazon Great Indian Festival 2025: லேப்டாப் மற்றும் டேப்லெட் இரண்டும் ஒரே சாதனத்தில்!
  7. Amazon Great Indian Festival 2025: உங்கள் கனவு வீட்டை குறைந்த பட்ஜெட்டில் அமைக்க சரியான வாய்ப்பு!
  8. Amazon Great Indian Festival 2025: Noise Cancellation கொண்ட Sony, Bose, Sennheiser ஹெட்ஃபோன்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடி
  9. Samsung Fab Grab Fest 2025: Galaxy S25, Galaxy Z Fold7 முதல் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வரை - அதிரடி சலுகை
  10. Amazon-ல் Tablet வாங்க இதுதான் சரியான நேரம்! iPad, Samsung, OnePlus டேப்லெட்டுகளுக்கு அதிரடி சலுகைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.